Headlines
Loading...
இனவாத கூலிப்படைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன வழிசெய்யலாம்

இனவாத கூலிப்படைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன வழிசெய்யலாம்




லத்தீப் பாரூக்

இனவாத கூலிப்படைகள் மீது மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப் படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களின் இரத்தத்தை சுவைக்கவும் சதையைப் புசிக்கவும் வெறி கொண்டு அலையும் இந்தக் கூலிப்படைகள் இன்னொரு ஜுலை 83ஐ உருவாக்க முனைகின்றனர். இத்தகைய இனவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் என்று இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இனியாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவர்களை கூலிப்படைகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் இவர்களுக்கும் பௌத்த மத போதனைகளுக்கும். அமைதியாக வாழ விரும்பும் பிரதான பிரிவு சிங்கள மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாறாக மியன்மாரில் நடப்பது போன்ற முஸ்லிம் விரோத போக்கை நோக்கிய திசையில் இந்த நாட்டை நகர்த்திச் செல்ல இவர்கள் முனைகின்றனர். உள்ளுரிலும் வெளியூரிலும் இவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்களின் கேடு கெட்ட திட்டங்களை அமுல் செய்வதற்கான பிரசாரத்தில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இனவாதிகள் நீதிமன்ற உத்தரவுகளைக் கூட துச்சமென மதித்து பகிரங்கமாகக் கிழித்தெறியும் மோசமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் பெரும்பாலும் சட்டத்தை மதிக்கும் இயல்பு கொண்டவர்கள். அத்தகைய மக்கள் நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை முற்றாக சிதைத்து சட்டத்தை அவமதிக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றும் பிரதான பிரிவு சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக இந்தப் பிரதான பிரிவு சிங்கள மக்களுக்கும் அவர்கள் பின்பற்றும் பௌத்த மதத்துக்கும் அவமானத்தை ஈட்டிக் கொடுக்கும் ஒரு பிரிவாகவே இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களின் சுவாசம் காடைத்தனம்இ இவர்களுக்கு தெரிந்த மொழி அடாவடித்தனம். சட்டத்தை மதிக்காமை எல்லா விதமான ஒழுக்க விழுமியங்களையும் புறக்கணித்து சட்டத்தை மதிக்காமல் மிக மோசமான முறையில் இழிநிலையில் நடந்து கொள்வது தான் இவர்களின் இயல்பும் பண்பும். பௌத்த மதத்தை காப்பாற்ற குரல் கொடுக்கின்றோம் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள் மக்களை தூண்டிவிட எந்த விதமான இழி நிலைக்கும் செல்ல இவர்கள் தயார்.

இந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் பௌத்த மதத்துக்கும் சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதுதான் இவர்களின் மூடத்தனமான வாதம். இந்த நாட்டில் முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றில் அவர்களின் அறிவீனத்தை தான் இது புலப்படுத்துகின்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களின் வரலாறு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான வரலாறாகும். போர்த்துக்கேயர்கள்இ டச்சுக்காரர்கள் பிறகு பிரிட்டிஷார் என இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்திருந்த காலங்கள் முழுவதும் முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களோடு தோளோடு தோள் கொடுத்து ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடியுள்ளனர். அந்த மன்னர்களின் நிதிஇ வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களாகவும் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். இந்த அளப்பரிய ஆதரவும் சேர்ந்து தான் இந்த நாடு 1948ல் சுதந்திரம் அடையக் காரணமாயிற்று.

ஆனால் மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகள் முஸ்லிம்களை புறக்கணித்துள்ளன. அவர்களுக்கு அவர்களின் சமூகம் சார்ந்த அரசியல்வாதிகள் கூட துரோகம் இழைத்துள்ளனர். எவ்வாறேனும் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் இதுவரை சமாதானமான வழிமுறைகளையே கையாண்டு வந்துள்ளனர்.

இந்த நாட்டில் மட்டும் அல்ல இந்த உலகில் கூட சமாதானமாக வாழ வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான விருப்பமாகும் ஆனால் இனவாத சக்திகள் இந்த சமாதான வாஞ்சையை அவர்களின் பலவீனமாக எடுத்துக் கொண்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் துயரங்களும் தியாகங்களும் தான் இந்த நாடு எல்டிடிஈ யின் நடவடிக்கைகளினால் பிரிவடையவிடாமல் தடுத்தது என்பதை இந்த இனவாதிகள் அறியமாட்டார்கள். இனவாத அரசியலால் தூண்டப்ட்ட அந்த யுத்தத்தால் அப்பாவி மக்கள் பலர் உயிர் இழக்க வேண்டியிருந்தததையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.

இப்போது கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பும் இன்னும் பல பொது இடங்களிலும முஸ்லிம்களுக்கு எதிராக மிகக் கேவலமான வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து இனவாதத்தை தூண்டிவிடும் இந்த இனவாதிகள் அன்று எங்கே இருந்தார்கள். பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் காப்பாற்றுவதாகக் கூறி நாடகமாடும் இவர்கள் அன்று எங்கே இருந்தார்கள்?

முஸ்லிம்களையும் அவர்கள் வணங்கும் இறைவனையும் அவர்கள் தமது உயிரை விட மேலாக மதிக்கும் இறை தூதரையும் இன்று தூற்றி வருகின்றனர். முழு சமூகத்தையும் அவர்கள் தூற்றுகின்றனர். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கேடு கேட்ட யூத சியோனிஸ்ட்டுகளின் நிகழ்ச்சி நிரலை அவர்கள் இங்கும் அரங்கேற்ற முனைகின்றனர். அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ரஷ்யா என பல நாடுகளின் துணையோடு இந்த நாசகார திட்டத்தை அவர்கள் இந்த நாட்டில் அமுல் செய்ய முனைகின்றனர்.

இஸ்லாத்துக்கு எதிரான பூகோள ரீதியான செயற்பாட்டின் பிரதான சூத்திரதாரியான இஸ்ரேலும் அதன் பங்காளி நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு இன்று முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மயான பூமியாக்கி விட்டனர். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதுதான் அவர்களின் பிரதான நோக்கம். இவர்கள் தான் இப்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாத கூலிப்படைகளின் பின்னணியிலும் செயற்படுகின்றனர்.

மத்திய கிழக்கில் இடம்பெறும் வன்முறைகள்இ கொலைகள் மற்றும் பயங்கரவாதம் என்பனவற்றின் ஞானத் தந்தையான இஸ்ரேல் இஸ்லாத்தையும் உலக முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்கு கங்கனம் கட்டி செயற்படுகின்றது. அதனால் அவர்கள் மத்திய கிழக்கிற்கு அப்பால் சென்றும் முஸ்லிம்களை கொன்று குவிக்கத் தயாராக உள்ளனர். 1989ல் சோவியத் யூனியன் சிதைவுற்ற பின்பு இதுதான் உலகில் தற்போது நடந்து வருகின்றது.

சிங்கள் இனவாத கூலிப்படைகளின் நிகழ்ச்சி நிரலும் இந்த வகையில் தான் அமைந்துள்ளது. அவர்களுக்கு முஸ்லிம்களின் இரத்தமும் சதையும் தான் தேவைப்படுகின்றது. வேறு எதுவும் அல்ல. மியன்மாரில் பௌத்த தேரர் ஒருவர் தலைமையில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவது போல் இலங்கையிலும் அவரின் சகாக்கள் மூலம் அதை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். இங்குள்ள இனவாதிகளின் மியன்மார் சகாவான விராத்து தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளுக்காக டைம் சஞ்சிகையால் ஆசியாவின் பௌத்த பயங்கரவாதி என வர்ணிக்கப்பட்டவர்.

முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகங்களுக்கு இடையில் பாரிய அளவிலான பிரச்சினைகள் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் பேச்சுவார்த்தைகள் மூலம் அவற்றை தாராளமாக தீர்த்துக் கொள்ளலாம். 2009 மே மாதத்தில் எல்டிடிஈ தோற்கடிக்கப்பட்ட பின் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் இரண்டு சமூகங்களும் சமாதானமாகவும் இனக்கபூர்வமுமாகவே வாழ விரும்புகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக யாரும் எந்த வகையிலும் எதிர்ப்பார்க்காத வகையில் அரசுக்கும் Nதூற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் புதிய தேன்நிலவு பயணம் ஒன்று தொடங்கியுள்ளது.

ராஜபக்ஷவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் வலுவடைந்து வந்த காலப்பகுதியில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிங்கள் இனவாத கூலிப்படையினரின் செயற்பாடுகளும் தோற்றம் பெற்றன. இவர்கள் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் பாதுகாப்பதாக தங்களை தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் ஒரு சிறு கூட்டம். முஸ்லிம்கள் சிங்கள இனத்துக்கும் பௌத்த மதத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என்ற ஒரு பொய் பிரசாரத்தை இவர்கள் கட்டவிழ்த்து விட்டனர். இந்த நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமை கோரலை அவர்கள் முன்வைத்தனர். தற்செயலாக இந்த நாட்டில் தரை இறங்கிய இளவரசன் விஜயனும் அவனது சகாக்களும் மற்றும் குவேனியும் இவர்களுக்கு இந்த நாட்டை எழுதிக் கொடுத்தது போல் இவர்கள் கோஷமிடத் தொடங்கினர்.

பௌத்த மதத்தின் தூதை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதுபோல் அவர்கள் பேசவில்லை. இந்த நாட்டிலிருந்து மதுபானம்இ சூதுஇ விபசாரம் மற்றும் மோசமான சமூக விரோத செயல்களை துடைத்தெறிய அவர்கள் குரல் கொடுக்கவும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அதிகாலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரையில் புனித குர்ஆனின் வழிகாட்டல் படியும் இறை தூதுரின் போதனை படியும் வாழ நினைப்பவர்கள். இந்த இறை போதனைகள் நிறைந்து காணப்படும் இடமான புனித பள்ளிவாசல்களை அவர்கள் குறி வைத்தனர். இந்த இஸ்லாமிய போதனைகள் பற்றி தற்போது ஹொலிவூட் பிரபலங்கள் கூட பேசத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் பிரபல ஹொலிவூட் நடிகை ஏன்ஜலினா ஜோலி கூட இதுபற்றி பேசியுள்ளார்.

இந்த இனவாதிகளுக்கு இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாது. அதன் சமாதானத் தூது கட்டமைப்பான வாழ்க்கை முறை என்பன பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்க்கை முறை வரலாறு என எதுவுமே இவர்களுக்குத் தெரியாது.

துரதிஷ்டவசமாக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாம் விரோத கோஷங்களுக்கு சில பிரதான சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரதான இடமளித்தன. இஸ்ரேலிய யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான மேலைநாட்டு ஊடகங்கள் செய்வதைத் தான் சில உள்ளுர் ஊடகங்களும் இங்கு செய்தன. இதன் விளைவாக குறிப்பிட்ட ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் சிங்கள் முஸ்லிம் மக்களின் மூளைகளைக் குழப்பும் பிரதான சக்தியாக அவர்கள் உருவெடுத்தனர்.

முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்கு தங்களால் இழைக்கப்படும் தீங்குகள்இ ஒட்டு மொத்தமாக சமூக நல்லிணக்கத்துக்கு இவர்களால் விழைவிக்கப்படும் கேடுகள் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக இரு சமூகங்களுக்கும் இடையில் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது.

ராஜபக்ஷ அரசின் பூரண ஆதரவு இவர்களுக்கு இருந்தது.

இதனிடையே தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது உயர் சகபாடிகள் இஸ்ரேலுக்கான விஜயங்களை மேற்கொண்டனர். அதேபோல் இலங்கை ராஜதந்திரிகள் சிலரும் ஹமாஸ் இயக்கம் பற்றி எதுவும் தெரியாதவர்களாக அவர்களை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டதோடு இஸ்ரேலுடன் ஒட்டி உறவாடத் தொடங்கினர்.

இந்தப் பின்னணியல்தான் சிங்கள இனவாதக் குழுவான பொது பல சேனா ஏற்பாடு செய்த அவர்களின் அலுவலகத்தை திறந்து வைக்கும் ஒரு வைபவத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் பங்கேற்றார். இந்த அலுவலகத்தை அவர்களுக்கு வழங்கியவர் ஒரு ஜெர்மன் யூதர். அவரும் அந்த வைபவத்தில் பங்கேற்றார்.

இந்தக் கட்டிடத்தை பௌத்த தர்மத்தை போதிக்கும் ஒரு பிரதான பிரிவு பௌத்த குழுவிடம் கையளிக்காமல் ஏன் அந்த ஜெர்மன் யூதர் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்பிடம் கையளித்தார் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால் இந்த நாசகார போக்கு அரசின் ஆசீர்வாதத்தோடு தொடர்ந்தது. ஏந்த விதமான நியாயமான காரணங்களும் இன்றி நாடு முழவதும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் கொழுத்தப்பட்டன. முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 'கிறீஸ் பேய்கள்' ஏவி விடப்பட்டன. புனித றமழான் மாதத்தின் இரவு வேளைகளில் ஆண்கள் பள்ளிகளில் தொழுது கொண்டிருந்த போது பெண்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன. பெண்கள் அச்சத்தோடு வீடுகளுக்குள் முடங்கும் நிலை உருவாக்கப்பட்டது.

இதுவரை இவ்வாறான 375 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரப்பட்டு அளுத்கமை பேருவளை ஆகிய இடங்களில் மாபெரும் கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்ட பின்னரும் அந்தப் பகுதிகளில் இடம்பெற்ற அட்டூழியங்களை இந்த உலகே அறியும்.

யூதர்களிடமும் பொது பல சேனாவிடமும் இருப்பது ஒரே விதமான பொது நிகழ்ச்சி நிரல். அது முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான வெறுப்புணர்வு. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தக் கொடுமைகளைப் புரிந்து வருகின்றனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் சியோனிஸ்ட்டுகள் எதைச் செய்து வருகின்றார்களோ அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தான் இலங்கையில் இந்த இனவாத குழுக்களும் தங்களது நிகழ்ச்சி நிரலை அமைத்துள்ளன.

2015ல் இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதோடு இந்த இனவாத சக்திகள் சற்று அமைதி அடைந்தன. ஆனால் ஐ.தே.க அரசு யூத இஸ்ரேலுக்கான கதவுகளை இந்த நாட்டில் மீண்டும் தாராளமாகத் திறந்து விட்டதோடு மீண்டும் இந்த சக்திகள் துள்ளத் தொடங்கியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிக உறுதியான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு கொள்கைகளோடு இத்தகையதோர் நிலைமையும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. முஸ்லிம் உலகுடனான அவரின் வித்தியாசமான போக்கு எல்லோரும் அறிந்த ஒன்றே. முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு இலங்கை இஸ்ரேல் உறவுகள் தற்போது செழிப்படையத் தொடங்கியுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளில் தொடர்ந்து ஈடுபடும் வகையில் சில சிங்கள பிரிவுகளின் முளைகள் சலவைச் செய்யப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விலைபோகக் கூடிய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தால் எதுவும் செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

தேசத்தைக் கொள்ளை அடித்தவர்கள்இ ஊழல்களில் ஈடுபட்டவர்கள்இ இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் என எல்லோர் மீதும் சட்டம் தன் கடமையை கடுமையாக நிறைவேற்றும் என்ற உறுதி மொழியோடு தான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று இரண்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. பலர் இன்னும் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கூட விஜயம் செய்கின்றனர். இவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதிலாக அரசாங்கமே இவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது.

இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் தான் இந்த இனவாத சக்திகள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது பழைய சுலோகங்களுடன் மீண்டும் தமது அசிங்கமான முகங்களை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.

இஸ்லாத்தை தூற்றுவதோடு மட்டுமன்றி எல்லாம் வல்ல இறைவனையும் அவர்கள் இப்போது கெட்ட வார்த்தைகளால் தூற்றத் தொடங்கியுள்ளனர்.

ஒரு சில மாதங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமைகளை மிக மோசமான கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அரசாங்கம் இந்த சட்ட விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு அதிருப்தி  அடைந்தாலும் கூட முஸ்லிம்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருகின்றனர்.

அரசின் கட்டுப்பாடுகளை மதிக்காமல்இ பொலிஸ் தடைகளை மதிக்காமல்இ நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் எல்லாவிதமான பேரணிகளையும் இவர்கள் எல்லா இடங்களிலும் நடத்தி வருகின்றனர். இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதி  அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்து 24 மணி நேரம் கழிவதற்கு முன் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்ட இவர்களுள் ஒருவரைக் கூட கைது செய்ய பொலிஸார் தவறிவிட்டனர்.

இன்று இந்த நாட்டில் உள்ள எல்லா மலைகளுக்கும்இ கற்பாரைகளுக்கும்இ பள்ளத்தாக்குகளுக்கும் நதிகளுக்கும் கூட அவர்கள் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு அவர்களின் சுவாசத்தை மட்டும் விட்டுவைத்து விட்டு மற்ற எல்லாவற்றுக்கும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர்.

இந்த எரியும் தீயில் எண்ணை ஊற்றுவது போல் தான் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் அண்மைக்கால பாராளுமன்ற உரையும் அமைந்தது. அமைச்சரின் கூற்றை பற்றிப் பிடித்துக் கொண்டு சிஹல உரிமயவின் பேச்சாளர் உட்பட இன்னும் பலர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்குள் இலங்கை முஸ்லிம்களும் உள்ளனர் என்று கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் இருந்து ஐஎஸ் அமைப்புக்கு 32 பேர் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படும் கூற்றுக்கு ஆதாரங்களை முன்வைக்குமாறு பலரும் சவால் விடுத்துள்ளனர். நீதி அமைச்சரின் இந்தக் கோமாளித்தனமான கூற்றுக்கு வெளியுறவு அமச்சர்இ ஜனாதிபதியின் செயலாளர் உட்பட மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்தக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்களை முன்வைத்த அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அல்லது அவர் தமது கூற்றை வாபஸ் பெற்று முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஜனாதிபதி நிர்ப்பந்திக்க வேண்டும். இந்தக் கூற்றுக்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்குள்ளும் குழப்பமானதோர் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றின் நடுவே 2016 டிசம்பர் 6ம் திகதி ஜனாதிபதி நடத்திய சர்வமத சமயத் தலைவர்களுடனான சந்திப்புக்கு பொது பல சேனா செயலாளர் சர்ச்சைக்குரிய ஞானசார தேரரும் அழைக்கப்பட்டுள்ளார்.

இது சமயத் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று பலர் கருதுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான ஜுலை 83 ஐ உருவாக்குவதற்கு சகல முயற்சிகளையும் செய்து அதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களை குழப்பி மூளைச் சலவை செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரை இந்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை உண்மையான சக வாழ்வை விரும்பும் ஏனைய சமயத் தலைவர்களை அவமதித்தது போன்றதாகும்.

அரசாங்கம் இவ்வாறான அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடாமல் மக்களுக்கு அது வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும். ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தைப் போலவே மீண்டும் இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் மோசமாக சீர்குலைந்துள்ளது. சட்டத்தை மீறி இந்த நாட்டை மீண்டும் கொலைகளமாக்க முயற்சிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த இனவாத சக்திகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் இனிமேலும் மெத்தனப் போக்கை கடை பிடிக்க முடியாது. அரசை கவிழ்ப்பதற்கு சில அரசியல் சக்திகள் இந்த இனவாத சக்திகளைப் பயன்படுத்துகின்றனவா என்ற சந்தேகமும் தற்போது வலுவடைந்துள்ளது. தமது வெளிநாட்டு எஜமானர்களின் தேவைகளை ஈடுசெய்ய உழைக்கும் இந்த சக்திகளை வேறோடு களைந்தெறிய வேண்டும்.