Top News

ஊழல் பெருச்சாலிகள் வயிறு வெடித்து மாள வேண்டும்!



இலஞ்ச ஊழலுக்கெதிரான போராட்டம் வெடிக்க வேண்டும்!

★ஜெம்ஸித் அஸீஸ்★

இன்று (டிசம்பர் 9) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்.

உலகளவில் வருடாந்தம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் வரை ஊழல் செய்யப்படுவதுடன்இ சுமார் 2.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் திருடப்படுவதாக தகவல்.

இன்றைய தினத்தில் ஊழலுக்கு எதிராக போராட கேரள அரசு இரு மொபைல் அப்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் மூலம் ஊழல்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஓடியோக்களை பொது மக்கள் பதிவேற்றம் செய்யலாம் என்கிறார் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன்.


ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு வருடம் தோறும் விருது வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார் அவர்.

சபாஷ்இ பாராட்டத்தக்க முயற்சி.

ஊழலை ஒழிக்க இன்னுமொரு படி ஏறியிருக்கிறது கேரள அரசு.

இலங்கையும் கேரள முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில்இ இன்று ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாட்டை நடத்தினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

அது கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

'தேர்தல் பிரச்சரங்கள் மூலம் ஏற்பாடும் ஊழல்' எனும் தலைப்பில் பிரதான அமர்வும் இடம்பெற்றது. ஊழல் எதிர்ப்பு தொடர்பான சித்திர கண்காட்சியையும் வந்திருந்தோர் பார்வையிட்டனர்.

2017 பெப்ரவரி 04ஆம் திகதி முதல் தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இதுவும் நல்லதொரு முயற்சிதான்.

அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் (பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாணஇ பிரதேச சபை உறுப்பினர்கள்...) சொத்துக்கள்இ பொறுப்புக்கள் பற்றி கேள்வி எழுப்பவும் மக்களால் முடியும்.

பொது மக்களே! விழித்துக் கொள்ளுங்கள்.

இனியும்இ ஊழல் பெருச்சாலிகள் உல்லாசமாக உலா வரக் கூடாது.

உங்களது கையிலும் ஆயுதம்.

உங்களுக்கு உதவி நல்க வுசயnளியசநnஉல ஐவெநசயெவழையெட ளுசi டுயமெய நிறுவனம் காத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

அதன் தொடர்பு இலக்கம் இதுதான்- 0117508322

இலஞ்ச ஊழலுக்கெதிரான போராட்டம் வெடிக்க வேண்டும்!

ஊழல் பெருச்சாலிகள் வயிறு வெடித்து மாள வேண்டும்!

நல்லவர்கள் நாட்டை ஆள வேண்டும்!


நன்மக்கள் நாட்டில் வாழ வேண்டும்!
Previous Post Next Post