Top News

பள்ளிவாசல் அருகே பாரிய இசைக்கச்சேரி நடாத்திய முஸ்லிம் அரசியல் தலைமை




ஒருவரின் குறைகளை சமூகவலையில் பேசுவது தவறு என்றாலும் ஒரு சில விடயங்களை பேசியே எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் சிலோன் முஸ்லிம் விழிப்புணர்வு கட்டுரைகள், அறிவுரைப் பத்திகள் போன்றவற்றை பிரசுரித்து வருகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமை மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வெற்றி பெற்றதும் அரசியல் செய்ததும் இஸ்லாத்தையும் முஸ்லிம் என்ற நாமத்தையும் வைத்தே, அதற்கே முஸ்லிம்கள் வாக்களித்தனர் வேறு எதற்காகவும் இல்லை அல்குர்ஆன் அல்ஹதீஸ்தான் எல்லாம் என்ற போக்கிலேதான் அரசியல் சென்று கொண்டிருந்தது. அப்படித்தான் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப்பாசறையில்தான் அனைத்து முஸ்லிம் (தற்பொழுது இருக்கும்) அரசியல் தலைமைகள், பாராளுமன்ற, மாகாண சபை, மாநகர சபை, பிரதேச சபை, உறுப்பினர்கள் உருவாகினர். முஸ்லிம் காங்கிரஸ்தான் அவர்களுக்கு அனைவருக்கும் தாய்வீடாக இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. இப்படியாக அரசியலில் கால்தடம் வைத்தவர்தான் அக்கரைப்பற்றை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா. இவர் கட்சியில் இருந்து பிரிந்து தேசிய காங்கிரஸ் என்ற கட்சியையும் உருவாக்கி அதன் தேசிய தலைவராக பதவி வகித்து கொண்டிருக்கிறார்.  

இவர் அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என்றதுக்காக அந்த பிரதேசத்தை முழுமையாக அபிவிருத்தி செய்துமுடித்தார். இன்னும் மூன்று தசாப்தங்களுக்கு அந்த பிரதேசத்திற்கு அபிவிருத்திகள் தேவைகள் என்ற அளவுக்கு அந்த அபிவிருத்திகள் இருக்கிறது. ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரிய தோல்வியடைந்தார் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் 
இங்கு நாங்கள் குறிப்பிடும் காரணம் இறைவனின் கோபத்தை அதிகம் சம்பாதித்த காரணமாகும்.

ஒவ்வொரு அபிவிருத்திகளை அதாஉல்லா செய்து முடித்த போதும் அதை திறப்பதற்காக பாரிய விழாக்களையும் பல இலட்சம் செலவில் வானவேடிக்கை வெடித்தும் கொண்டாடினால் ஒரு லொறியில் பட்டாசுகள் வரவழைத்து வெடிக்க வைத்த வரலாறும் உண்டு. இதையும் தாண்டி பாரிய இசைக் கச்சேரிகள் ஒவ்வொரு விழாக்களும் இருக்கும் இது உள்ளுர் இசைக்குழுக்கள் இல்லாமல் கொழும்பு இசைக்குழுக்கள் கொண்டே நடாத்தப்பட்டு இதற்கும் பல இலட்சம் செலவழிக்கப்பட்டது. இதில் அமைச்சரும் ஓரிரு பாடல்கள் பாடுவார், இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் இசைக் கச்சேரி நடாத்தப்பட்ட இடங்கள் ஒன்று அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் ( அக்கரைப்பற்று மர்கஸ் பள்ளிவாசலுக்கு பக்கத்து இடம்) , பிஸ்கால் சந்தி ( பட்டினப்பள்ளி அருகாமை) அதாஉல்லா அரங்கம் ( தௌஹீத் பள்ளி பக்கம்) இப்படி நடத்தியது எல்லாமே பள்ளிவாசல் அருகாமையில்தான்.

ஆக அனாச்சாரங்கள் அங்கு நடந்தேறின,அநியாயங்கள் அகம் கொண்டது இவைகள் இறைகோபத்தை உண்டு பண்ணும் செயலாகும் அன்றிருந்த பள்ளிவாசல் தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். ஜம்மியதுல் உலமா வாய்மூடி இருந்தது. அதிகாரத்திற்கு அடிபணிந்தனர்.

செயல்கள் அனைத்தும் இன்று வினையாக மாறிப்போய் தோல்வியில் இருந்து கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா இவைகளை உணர்ந்து செயற்படுவார் என நம்புகிறோம்.

பஹத் ஏ.மஜீத்.
பிரதம ஆசிரியர்

Previous Post Next Post