Headlines
Loading...
 மூத்த பத்திரிகையாளர் என்.எம் அமீன் அவர்கள் ஊடக உலகிற்கோர் பாரிய சக்தி

மூத்த பத்திரிகையாளர் என்.எம் அமீன் அவர்கள் ஊடக உலகிற்கோர் பாரிய சக்தி




எழுத்து என்பது பாரிய ஆயுதம் என அடிக்கடி சொல்லி திடம் கொள்பவர்தான் என்.எம் அமீன், முஸ்லிம் ஊடக உலகின் ஜாம்பவானாக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ள இவர் முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளுர் சர்வதேச முஸ்லிம் அமைப்புக்களின் ஆலோசகராகவும் இருக்கிறார் இவர் குறித்த விசேட பதிவே இது. 

மாவனல்லை அரநாயக்க தல்கஸ்பிடிய பகுதியில் சிறிய குடும்பத்தில் 1952 ம் ஆண்மு பிறந்தார் என்.எம் அமீன். அரச ஆயுர்வேத வைத்தியரான அவரின் தந்தையின் பின்புலமே அவர் சிங்களத்தில் புலமைபெறுவதற்கு காரணம், பாடசாலைக் காலத்தில் பள்ளிகூடம் கலைந்த பிறகு வீட்டருகில் இருந்த சலுானில் மூன்று மொழியிலும் தினமும் வெளிவரும் பத்திரிகைகளை வாசிப்பது வழக்கம் என உணர்வுபூர்வமாக பகிர்கிறார் அவர். அந்த வாசிப்பு பழக்கமே பிற்காலத்தில் தன்னை ஒரு பத்திரிகையாளராக மிளிரச் செய்தது என்றும் குறிப்பிடுகிறார்.



பாடசாலைக் கல்வி முடிவுற்றதன் பிறகு களணி பல்கலைக்கு தெரிவாகிய அமீன் கொமியுனிகேசன் துறையில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். இவரின் ஊடக பிரவேசம் தினகரனிலேதான் அரங்கேறியது அப்போது இருந்த சிவகுருநாதன் அவர்களின் பாசறையில் பத்திரிகை துறையை துவங்கிய அமீன் தன்னுடைய சிங்கள மொழி ஆற்றலால் பாராளுமன்ற செய்தியாளராக நியமிக்கப்பட்டார். அத்தோடு தன்னை நிறுத்திக் கொள்ளாமல் அங்கு அதாவது பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளராக தன்னை உயர்திக் கொள்ளவும் முயற்சி செய்து வெற்றியீட்டினார்.


பாராளுமன்றத்திலும் பத்திரிகை துறையிலும் அதிக தொடர்புகள் வைத்திருந்த அமீன் பிற்காலத்தில் லேக் ஹவுசில் முகாமையாளராகவும் பணியுயர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது, முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாட்டை உணர்ந்த அமீன் முன்னாள் நவமணி பிரதம ஆசிரியர் மர்ஹூம் அஸ்ஹருடன் கைகோர்த்து நவமணி பத்திரிகைக்கு உரமூட்டினார், அஸ்ஹரின் மறைவுக்கு பின்னர் பிரதம ஆசிரியராக பணியுயர்ந்த அமீன் இன்றுவரை அப்பத்திரிகையை முன்னின்று நடாத்திவருகிறார்.

பத்திரிகை நடாத்துவது என்பது கடினம் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பத்திரிகை முஸ்லிம்கள் நடாத்துவது என்பது அதைவிட கடினம் முட்கள் நிறைந்த பாதையாக கருதும் கடந்தகால ஞாபகங்களை புன்னகையுடன் நினைவு கூர்ந்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டோம் ஊடகவியலாளருக்கு எது முக்கியம் என்று சட்டென சொன்னார் Contact தொடர்புகள் என்று அந்த அதிகரித்த ஆளுமைகளின் தொடர்பினால்தான் அனைத்தையும் பெறமுடியும் என்று.

கொழும்பு பல்கலையில் இருக்கும் இதழியல் டிப்ளோமாவை தமிழிலும் ஆரம்பிக்க அமீன் எடுத்த முயற்சிகளை மறக்கமுடியாது எனலாம், இன்று இளைஞர்கள் முயற்சியுடன் துணிச்சலுடன் பணியாற்றுவது குறைவாக உள்ளது என கவலைப்படும் அமீன் இன்று அதிகமதிகம் தொழில்வாய்ப்பு உள்ள ஒரு துறையாக ஊடகத்துறை கருதப்படுவதாக தெரிவித்தாார்.

திறமையுள்ள அறிவுள்ள துணிச்சலுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது என திடம் கொள்கிறார் என்.எம்.அமீன், முஸ்லிம் ஊடக உலகிற்கும் இலங்கையின் பத்திரிகை துறைக்கும் கிடைத்த மாபெரும் சகத்யு என்.எம் அமீன் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

முஸ்லிம் ஊடக ஆளுமைகள் பத்தியி்ன் முதல் அங்கமே இது, தொடரச்சியாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள், இளம் சாதனையாளர்கள் குறித்து எமது இணையத்தில் வெளியாகும்.
பஹத் ஏ.மஜீத்