பொதுவாக இன்று முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இஸ்லாமிய சூறத்திலிருந்து மாறி வேற்றுக் கலாச்சாரங்களுக்கு அடிமையாகி இருப்பதை காணமுடிகிறது. நடை உடை பாவனை அனைத்தும் மேற்கத்தய கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிட்டது இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவது சிரமமாக கருதப்படுகிறது, ஐவேளை தொழுகையை நிறைவேற்றாது பேஸ்புக்கில் சாட்டிங் செய்வது வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்வது இன்னோரன்ன சமூக வலைத்தளங்களை பாவிப்பது தனிமையில் இணையத்தளங்களில் இருக்கும் பார்க்க கூடாத படங்களை பார்த்து சுய இன்பம் காண்பது போனற அசிங்கமான செயற்பாடுகளில் ஈடுபடுவதை கண்டிருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.
இப்படியான செயல்களை இளைஞர் யுவதிகள் செய்வதற்கு அந்த சமூகத்தின் தலைவர்கள், தாய் தந்தையர்கள், முஸ்லிம் ஊடகங்கள், முஸ்லிம் அமைப்புகளே காரணம் ஏன் என்றால் இவைகளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் இல்லையேல் மீண்டும் ஒரு ஜாஹிலிய்யா காலம் வரும்.
இன்று முஸ்லிம்கள் சுற்றுலா சென்று மது பாவனை பாவிப்பது, கேளிக்கை வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவது போன்ற ஈனமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இவைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் அவைகளை தடுக்க எமக்கு தைரியம் இல்லை. நாங்கள் வேறு கலாச்சார நாட்டில் வாழ்ந்தாலும் இந்த இலங்கை திருநாட்டில் நமது மத அனுஸ்டானங்களை பின்பற்ற நமக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் கூட நாங்கள் அதனை செய்வதில் மந்த நிலை.
டிசம்பர் மாதம் பொதுவாகவே களியாட்டம், பண்டிகை, சுற்றுலா, விடுமுறை என்று பாவங்களை அதிகம் அதிகம் செய்ய துாண்டும் ஒரு மாதம், குறிப்பாக அலுவலகங்களில் பாரட்டி, போனஸ் பாரட்டி, கிறிஸ்மஸ் பார்டி, நியு இயர் பார்டி என்று வித விதமான அனாச்சாரங்கள் நடக்கும் ஓர் மாதம் இதில் முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு தவிர்ந்து பாவங்களை விட்டு துாரமாகுவது என்று உற்று சிந்திக்க வேண்டும் அதைவிடுத்து வேற்று கலாச்சாரங்களுக்கு அடிமையாகி அதனை நாங்களும் செய்வதும் கிறிஸ்மஸ் கொண்டாடுவதும் கரோல் இசைப்பதும், கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்பதும், மெழுவர்த்தி ஏற்றுவதும் பாவமான செயல்களாகும். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள கரோல் கிறிஸ்மஸ் கரோல் இசைக்கும் குழுவில் முஸ்லிம் யுவதி ஒருவரும் இருக்கிறார் இந்த படத்தை வைத்தே இந்த பத்தி எழுதப்பட்டது.
பாவங்களில் இருந்து மீண்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு முஹ்மின் களாக வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக.