நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு கட்டப்பட்டது அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த திட்டத்தை முழுமையாக ஒருங்கிணைத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் மனைவி பேரியல் அம்மையார் இவர் அம்பாறை மாவட்டத்தில் கொடி கட்டிப் பறந்த காலப்பகுதியில் அதிகப்படியாக சேவை செய்து கொண்டிருந்த காலப்பகுதியில் இன்னுமொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு இது பெரும் பிரச்சினையாக இருந்தது எப்படி பேரியல் செய்வது அப்படி செய்தால் என்னுடைய வாக்கு வங்கி விழுந்துவிடும் என்று எண்ணி சிங்கள பெரும்பான்மை இனவாத கட்சிகளின் உதவிகளை பெற எண்ணினார் குறிப்பிட்ட அரசியல்வாதி அப்படி பெற்று திறக்கப்படவிருந்த நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தினார் இன்று வரை அது வழங்கப்படவில்லை என்ற சோகமான கதை இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க வட்டமடு காணிப்பிரச்சினை இருப்பது உலகமறி்ந்த விடயம், இந்த முஸ்லிம்களின் காணியை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் சரி செய்திருக்கலாம் யுத்தம் நிறைவுற்று பலவருடங்கள் சென்றிருந்தாலும் இந்த பிரச்சினை நீண்டு கொண்டு செல்கிறது இதற்கு முற்று முழுதாக அரசியல்வாதிகளே காரணம் அக்கரைப்பற்றில் அதிகாரத்தில் இருந்த குறிப்பிட்ட அரசியல்வாதி இந்தப்பிரச்சனையை முன்னைய அரசாங்கத்தின் மூலம் இலகுவாக தீர்த்திருக்க முடியும் அப்படி நடக்கவில்லை,
சென்ற வாரங்களில் வயல் பிரதேசத்தில் பிக்கு ஒருவர் வந்து பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்துள்ளார். மோதல் இடம்பெற்றுள்ளது இதனையும் தாண்டி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வந்து இனவாதமாக செயற்பட்டுள்ளார். இவைகளை கேட்க இதுவரை நாதியில்லை என கண்ணீர் மல்கின்றனர் வட்டமடு விவசாயிகள்.
இதற்கிடையில் குறிப்பிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தக் காரணமாக இருந்த அரசியல்வாதி நீ இதனை தொடர்ந்து பிரச்சினையாகவே கொண்டு செல் இதனை ஒன்று நான் முடிக்க வேண்டும் என்று அரசியல் இலாபாமாக பயன்படுத்தியுள்ளார்.
என்னவொரு சிறுபிள்ளைத் தனம், தேர்தலில் அதிகாரத்தில் இருப்பவர் தோற்றுப்போவது என்பது மக்கள் அவரை வேண்டாம் அல்லது நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் என்ற அர்த்தமே அது இதனை தவிர்த்தது மீண்டும் கேட்டு மூக்குடைபடாமல் ஒதுங்குவது நல்லது, அல்லது வெற்றிபெற வேண்டுமானால் மக்களோடு மக்களாகி சேவைகள் செய்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். சிந்தித்தது செயல்படுங்கள்.