Top News

முஸ்லிம் தலைமைகளை நேர்காணும் முஸ்லிம் தொகுப்பாளர்கள் கவனத்திற்கு




இலங்கையில் முஸ்லிம்களுக்கென அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் ஹிந்துக்கள் அல்லது சிங்களவர்கள் தங்கள் வசம் பாரிய ஊடகங்களை வைத்திருக்கும் இத்தருவாயில் தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நாம் அங்கும் இரண்டாம் நிலை ஊடகவியலாளராகவே பணிபுரிகிறோம். இது நமது தவறு அல்ல மாறாக காலத்தின் சோதனை.

முஸ்லிம்கள் ஊடக அமைச்சர்களாக அல்லது அரசின் முக்கிய பதவிகளில் இருந்த முன்னைய காலகட்டங்களில் தனியார் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்திருக்க முடியும் ஆனால் அன்றிருந்தவர்கள் அப்படி சிந்தித்து செயல்படவில்லை அதன் வினையே இன்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் பிரதானமாக தமிழ் தொலைக்காட்சிகளாக அதாவது Terrestrial Antenna  வில் பார்க்க கூடிய நேத்ரா ரி.வி, சக்தி ரி.வி, வசந்தம் ரி.வி போன்றவை காணப்படுகிறது. செய்மதி, கேபிள், இணைய ரி.விகள் இருந்தாலும் அவைகள் பாமர மக்களிடத்தில் பேசப்படுவதில்லை. இந்த தொலைக்காட்சிகள் பாமர படித்த வர்க்கத்தினரிடத்தில் பேசு பொருளாக காணப்படுகிறது. இந்த தொலைக்காட்சிகளின் செய்திகள், நிகழ்ச்சிகளும் மனதில் பதியப்பட்டு விட்டன. அதில் முக்கிய வகிபங்கை வகிப்பவை அரசியல் கலந்துரையாடல்.

அரசியல் கலந்துரையாடலுக்கு நேத்ராவில் "வெளிச்சம்" மற்றும் சதுரங்கம் என்றும் வசந்தம் ரி.வியில் "அதிர்வு" என்றும் சக்தியில் "மின்னல்" என்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது. 95 சதவீதமாக நேரடியாக ஒளிபரப்படுகிறது. இதில் விசேடம் என்றால்  சக்தி தவிர்த்து ஏனைய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றனர். மக்கள் பிரச்சினைகளை பேசவேண்டிய இடத்தில் தனிப்பட்ட அரசியல் நோக்குள்ள வீண்பேச்சுக்களையும் ஏனைய கட்சி மற்றும் உறுப்பினர்களை குறைபேசும் விதத்திலும் கலந்துரையாடல் மாற்றப்பட்டிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் இத்தருவாயில் நாரதர் வேடம் போட்டு அரசியல் நிகழ்ச்சி நடாத்தும் தொகுப்பாளர்கள் கூட்டிவிட்டு கூத்துப்பாக்கும் அல்லது Rating அதிகரிக்க செய்யும் சித்த விளையாட்டுக்களை செய்துவருகின்றனர் இறுதியில் முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லை என ஏனைய சமூகத்தார் எண்ணும் அளவுக்கு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேலிடத்தில் உள்ளவர்கள் செய்யும் சதியாக இருந்தாலும் அதனை கொண்டு நடாத்தும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு புரிய வேண்டும். நமது மார்க்கம் குறைகளை மறைக்க சொல்லிய மார்க்கம் அல்லது ஒற்றுமை எடுத்தியம்ப சொல்லிய மார்க்கம் என்று அப்படி புரியப்படவில்லை என நினைக்கிறோம்.

இன்சா அல்லாஹ் சமூகத்தின் எதிர்காலத்தை உணர்ந்து நிகழ்ச்சி படைக்க முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க செயற்பட முன்வருமாறு அழைக்கிறோம். யாரையும் குறி்ப்பிட்டு இந்த பத்தி பிரசுரிக்கவில்லை குற்றம் செய்தவர்களுக்கு மட்டும் கடினமாக இருக்கும்.

பிரசுரிக்கப்பட்ட படம் இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான வசந்தம் ரிவியில் ஒளிபர்பான கடந்தவார அதிர்வு நிகழ்ச்சியின் ஸ்கீரன் சொட், காப்பகத்திற்கு மட்டுமே இந்த படம் விமர்சனத்திற்கு அல்ல.
Previous Post Next Post