Top News

கிழக்கில் 2020 க்குள் 2000 பேருக்கு தொழில் வாய்ப்பு - பொறியியலாளர் நாபீர்


பொறியியலாளர் நாபீர் 


எம்.வை.அமீர்

கடந்த 23 வருடங்களுக்கு மேலாக மக்கள் பணியாற்றிவரும் நாபீர் பௌண்டேசன், எதிர்வரும் 2020 க்குள்  2000பேருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளரும் பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
நாபீர் பௌண்டேசனின் கல்முனைத் தொகுதிக்கான வருடாந்த ஒன்றுகூடலும் மக்கள் சந்திப்பும் சாய்ந்தமருது சீ பிறீஸ் வரவேற்புமண்டபத்தில் 2017-01-27 ஆம் திகதியன்று பௌண்டேசனின் சாய்ந்தமருது மத்தியகுழுவின் தலைவர்ஜிப்ரி உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்துக்களை வெளியிட்டார்.
இப்போது இளைஞர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் தொழில் ஒன்றை தேடிக்கொள்வது, இவ்வாறான முக்கிய வாழ்வாதார தேவை ஒன்றுக்காக இளைஞர்களை வழிகாட்டக்கூடிய தலைமைகள் எங்கள் மத்தியில் இல்லாதது பெரும் குறையாகும். இதன்காரணமாகவே இவர்கள் தவறான முடிவுகளுக்குள் உந்தப்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கிவரும் நாபீர் பௌண்டேசன், தனது கால்களை அகலவிரித்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதனூடாக சிறந்த வேலையாட்கள் அணியை உருவாக்கி சர்வதேச தொழில் சந்தையில் வேண்டப்படும் தொழில்களில்களுக்கு தகுதியானவர்களை இப்பிராந்திய  இளைஞர்களில் இருந்தே உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களினதும் நமது பிரதேசத்தினதும் தேவைகளை நிவர்த்திக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் நமது பிரதேசத்தில் இருக்கின்ற போதிலும் இவர்கள் கண்களை மூடிக்கொண்டிருப்பது இப்பிராந்திய மக்களின் துரதிஸ்டமாகும் என்றும், தொடர்ந்தும் இவர்களுக்கு இடமளியாது பிராந்தியத்தின் நன்மைகருதி நாபீர் பௌண்டேசன், தனது சார்பில் பிராந்தியத்தின் மீது அக்கறையுள்ள சிறந்த அரசியல் தலைமைகளை களத்தில் இறக்காது என்றும் கூறமுடியாது என்றம் மக்கள் சேவைக்காக துடிப்புள்ளவர்களை அரசியல் களத்தில் இறக்குமாறு தனது அமைப்புக்கு பாரிய அழுத்தங்கள் இருப்பதாகவும்  பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
நிகழ்வின்போது அமைப்பின் கல்முனைத் தொகுதி  அமைப்பாளர் ஸாதிக் எஸ். முஹம்மட், நாபீர் பவுண்டேஷன் பெண்கள் அமைப்பின் சார்பில்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி, நாபீர் பௌண்டேசனின் சம்மாந்துறை மத்தியகுழுவின் தலைவர் கே.எல்.அபூசாலி, அமைப்பாளர் தானீஸ்  மற்றும் உபதலைவர் எம்.எஸ்.எம்.றியால் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post Next Post