Top News

அமபாறை மாவட்ட முஸ்லிம்கள் 35,000 ஏக்கர் நிலங்களை இழக்கும் அபாயம்

வட்டமடு நிலம்



ஆரம்ப காலம் தொட்டு அம்பாறை மாவட்டத்தில் முதன்மை இனமாக விளங்கிய முஸ்லிம்கள் மாவட்டத்தின் நாலா புறங்களிலும் வாழ்ந்து வந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாவதற்கு முன்னர் மூவினங்களும் இந்த மாவட்டத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். விடுதலைப்புலிகள் ஆதிக்கம் கூடிய காலப்பகுதியில் தங்களின் விவசாய குடியிருப்பு நிலங்களை விட்டு பிரதான ஊர்ப்பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர் முஸ்லிம்கள்.

தங்களின் நிலங்களையும், குடியிருந்த இடங்களையும் கடந்த 30 வருட கால யுத்தத்தில் இழந்துவிட்ட அம்பாறை மாவட்டமுஸ்லிம்கள் யுத்த முடிவுக்கு பிறகும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர்கள் இருந்த இடங்களில் காடுகள் வளர்ந்துள்ள காரணத்தினால் வன இலாகா அந்த நிலங்களை சொந்தமாக்கி கொண்டது. இன்னும் சில இடங்களை தொல் பொருள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டனர். இவற்றிற்கு பின்னால் பாரிய இனவாத செயற்பாடுகள் காணப்படுகிறது.

கிட்டத்தட்ட 35 000 ஏக்கர் நிலங்களை இழந்து தவிக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து சிந்திக்க யாருமற்ற நிலையில் சிலோன் முஸ்லிம் இணையத்தின் நிலங்களை பாதுகாப்போம் பிரச்சாரம் மூலம் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்த எண்ணியுள்ளது.


பொத்துவில் - லகுகல எல்லையில் அமைந்துள்ள வேகாமம், கிரான்கோவை, கிரான் கோமாரி கிராமங்களில் உள்ள நிலங்கள்,

ஒலுவில் - அஷ்ரப் நகர், பொன்னன் வெளி, தீகவாபி நிலங்கள்,

ஆலயடிவேம்பு - கீத்தப்பத்து பாவா புரம்

தமண - அம்பலம் ஓயா நிலங்கள்

நுரைச்சோலை - வீட்டுத்திடட்டம் - நிலங்கள்
பொத்தானை மற்றும் வட்டமடு போன்ற நிலங்களை மீட்டெடுக்க அனைத்து சகோதரர்களும் முன்வர சமூக வலைத்தள பிரச்சாரத்தை முன்னெடுப்போம்

Previous Post Next Post