Top News

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம்
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக என்று பிரார்த்திக்கின்றோம்.
எதிர்வரும் 04.02.2017 சனிக்கிழமை எமது நாடு தனது 69வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றது.
சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதில் நமது சமூகம் அதிக பங்களிப்புச் செய்துள்ளது என்பதையும் நமது சமய, சமூக, அரசியல் தலைமைகள் அன்று தொட்டு இன்று வரை நாட்டுப் பற்றோடு செயற்பட்டுள்ளனர்;;; இன்றும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர் என்பதையும், இந்நாட்டு முஸ்லிம்கள் பிரிவினைவாத செயற்பாடுகளிலோஇ சமய நிந்தனைகளிலோ, சமய சண்டைகளிலோ ஈடுபடாதவர்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பமாக இவ்வருட சுதந்திர தின விழா அமைய வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.
அத்துடன் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அது சம்பந்தமான நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் மாற்று மத சகோதரர்களுடன் சந்திப்புகள் போன்றவற்றை நடத்துவதோடு; எமது நாட்டின் தேசியக் கொடியை தத்தமது இல்லங்களிலும், பாடசாலைகளிலும், வியாபார நிலையங்களிலும் ஏற்றுமாறும் சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொளகின்றது. அதே நேரம் பொது வேலைத் திட்டங்கள், சிரமதானங்கள் போன்றவற்றில் அயலில் வாழும் மாற்று மதத்தவர்களையும் இணைத்துக் கொள்வது சமூக சகவாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதையும் ஜம்இய்யா நினைவு படுத்திக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்!


அஷ்.-ஷைக் எச்.உமர்தீன்
செயலாளர்- பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

Previous Post Next Post