Top News

எனது பிள்ளைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்


சிங்­க­ளத்தில்: 
தரிந்து உடு­வ­ர­கெ­தர
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்


சிங்­கள ஊடக செவ்­வியில் மௌலவி பாஸில் பாரூக்
ராவய சிங்­கள மொழி பத்திரிகை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஊடகச் செய­லாளர் மௌலவி பாஸில் பாரூக்­குடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கு தரப்­ப­டு­கி­றது.
கேள்வி: ஜம் இய்­யத்துல் உலமா அமைப்பு என்றால் என்ன?
இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் அறி­ஞர்­களின் அமைப்பே ஜம் இய்­யத்துல் உலமா என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்கு முன்­பி­ருந்தே இந்த இயக்கம் இங்கு செயற்­பட்டு வரு­கி­றது. இலங்கையில் 99.9 வீத­மான முஸ்லிம் மக்கள் ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு கட்­டுப்­பட்டு நடக்­கி­றார்கள். இது அர­சியல், கட்சி சார்­பற்ற ஒரு நிறு­வ­ன­மாகும். தற்­போது ஆறா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்டு இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

நாம் அண்மைக் காலங்­களில் மோச­மான சூழ்­நி­லை­களைச் சந்­தித்தோம். அப்­போ­தெல்லாம் முஸ்­லிம்­களை அமைதி, கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கிறோம். அவ­ச­ரப்­ப­டாது பொறு­மை­காக்­கும்­படி ஆலோ­சனை வழங்கி வந்­தி­ருக்­கிறோம். இதனை நீங்­களும் அவ­தா­னித்­தி­ருப்­பீர்கள். முஸ்­லிம்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் சட்­டத்தை கையி­லெ­டுக்­க­வில்லை. தவ­றான வழியில் சென்­ற­தில்லை. நாம் வழங்கும் அறி­வு­ரை­களைக் கேட்டு நடப்­பதே இதற்குக் கார­ண­மாகும்.
கேள்வி: ஷரீஆ சட்டம் என்றால் என்ன?
முஸ்லிம் ஒருவர் எவ்­வாறு வாழ­வேண்டும் என்­பது பற்றி இஸ்லாம் எங்­க­ளுக்கு போதித்­தி­ருக்­கி­றது. ஒரு குழந்தை உலகில் பிறந்­தது முதல் எப்­படி நடக்க வேண்டும் என்ற விதி முறை­யொன்றை இஸ்லாம் வகுத்துத் தந்­தி­ருக்­கி­றது. குழந்தை பிறந்­த­வுடன் என்ன செய்ய வேண்டும்? எப்­படி சுத்தம் செய்ய வேண்டும், தாய்ப்­பா­லூட்­டு­வது எப்­படி? நற்­குணம் நல்­லொ­ழுக்­க­முள்ள பிள்­ளை­யாக வளர்ப்­பது எப்­படி? போன்ற அத்­தனை வழி­மு­றை­களும் சொல்லித் தரப்­பட்­டி­ருக்­கி­றது. இல்­லற வாழ்வை எவ்­வாறு கொண்டு செல்­வது? பெற்­றோ­ருடன் எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும்? இவ்­வாறு வாழ்வின் அத்­தனை வழி­மு­றை­க­ளுக்கும் இஸ்லாம் நல்­வ­ழி­காட்டிக் கொண்­டி­ருக்­கி­றது. 

மனி­தர்கள் பாதிப்­புக்­குள்­ளாகும் போது உதவி செய்­வது குறித்தும் இஸ்லாம் போதிக்­கி­றது. அண்­மையில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கின் போது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் நாம் நிவா­ரணம் வழங்­கினோம்.

இவ்­வாறு உதவி புரி­வதும் ஷரீஆ சட்டம் தான். அடுத்த வீட்­டா­ருக்கு உத­வு­வது உண்மை முஸ்­லிமின் பண்­பாகும். முஸ்லிம் அல்­லா­த­வர்­களை எவ்­வாறு கௌர­விக்க வேண்டும் என்று இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் எடுத்­தி­யம்­பு­கி­றது. குற்றம் புரிந்தோர் எப்­படித் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதும் ஷரீஆ சட்­டத்தில் இருக்­கி­றது. 
கேள்வி: ஷரீஆ சட்டம் நாட்டுச் சட்­டத்­துடன் மோதக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் உள்­ள­னவா?
அவ்­வாறு மோதும் நிலை இல்லை. பன்றி இறைச்சி சாப்­பி­டத்தான் வேண்டும் என்ற சட்டம் ஒன்று இலங்­கையில் இல்லை. ஆனால் ஷரீஆ சட்­டத்தில் பன்றி மாமிசம் கூடாது என்று தடை உள்­ளது. எனவே அதற்­கி­ணங்க நம் நாட்டு சட்­டப்­படி பன்றி மாமிசம் சாப்­பி­டாமல் இருக்க முடியும். அதே­போன்று இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்தை ஏற்­கா­த­வர்­க­ளுக்கு பன்றி இறைச்சி சாப்­பிட முடியும். இரு சட்­டங்­களும் ஒன்­றுக்­கொன்று மோது­வ­தில்லை என்­ப­தற்கு இந்த உதா­ரணம் ஒன்றே போது­மா­ன­தாகும். மேலும் விளக்­கு­வ­தாயின் நான் எனது பிள்­ளைக்கு குர்­ஆ­னையும் சம­யத்­தையும் போதிக்­கிறேன். பிள்­ளையை பள்­ளிக்குப் போகு­மாறு ஏவு­கிறேன். உண்­மை­யி­லேயே இந்த ஷரீஆ முறை நாட்டுச் சட்­டத்­துடன் குறுக்­கிட்டுக் கொள்­வ­தில்­லையே!

ஹலால் பிரச்­சினை தலை தூக்­கி­யது. முன்பு நாம் கோழி இறைச்சி வாங்­கு­வ­தென்றால் எமது ஷரீஆ வில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வாறு கோழி­களை அறுக்கும் இடங்­க­ளுக்கு சென்­றுதான் அவற்றை வாங்­குவோம். ஒரு­சிலர் கோழியை உயி­ருடன் வாங்கி வந்து ஷரீஆ சட்­டப்­படி வீடு­களில் அறுத்து உண­வாக கொள்­வதும் உண்டு. முஸ்லிம் அல்­லாத ஏனை­ய­வர்­களும் கூட முன்பு தமக்கு வேண்­டி­ய­வாறு கோழி­களை அறுத்து வீடு­க­ளி­லேயே தயார் செய்து கொண்­டனர்.

ஆனால் இன்று மிகவும் பாரி­ய­ள­வி­லான கோழி இறைச்சி வர்த்­தகம் இடம் பெறு­கி­றது. பல நிறு­வ­னங்கள் இந்த வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றன. ஷரீஆ சட்­டத்தின் ஹலால் முறையைப் பேணும் எங்­களால் கோழி இறைச்சி கொள்­முதல் செய்­வதில் சிக்கல் உள்­ளது. இவற்றில் ஹலால் என்­பதைக் கண்­ட­றியும் முறை இல்­லா­மையே சிக்­க­லுக்குக் கார­ண­மாகும். இதனால் எங்­களால் சாப்­பிட முடி­யு­மான ஹலால் உணவு எது என்று முஸ்­லிம்கள் எங்­க­ளிடம் தான் வின­வு­கின்­றனர். 

அத்­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு பொருத்­த­மான விதத்தில் எமது தயா­ரிப்­பு­களை எப்­படி செய்து கொள்­வது என்று பிர­பல நிறு­வ­னங்­களும் எம்­மிடம் கேள்வி எழுப்­பின. இந்த சந்­தர்ப்­பத்தில் தான் முஸ்­லிம்­க­ளுக்கு ஆகு­மா­னது என்ற சான்­று­ரையை வழங்கும் பொறுப்பை நாம் ஏற்றோம். இதனை நிறை­வேற்­று­வ­தற்கு எமக்கு இரண்டு வழி­மு­றைகள் இருந்­தன.

ஒன்று முஸ்லிம் வியா­பா­ரி­களைக் கொண்டு முஸ்­லிம்கள்  மாத்­திரம் வாங்கக் கூடிய உண­வு­களைத் தயாரித்து சந்­தைப்­ப­டுத்தும் முறை. அடுத்­தது தற்­போ­துள்ள எல்லா நிறு­வனத் தயா­ரிப்­பு­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு ஆகு­மா­னது என்று சான்­றிதழ் வழங்கும் முறை­யாகும். பல்­லின சமூ­கங்கள் வாழும் எங்கள் நாட்­டுக்கு இரண்­டா­வ­தாக உள்ள முறையே பொருத்தம் எனக் கண்டோம்.

மறு­பு­றத்தில் எமது நாட்டு தயா­ரிப்­புகள் மத்­திய கிழக்கு நாடுகள் மற்றும் உல­கத்தில் ஏனைய நாடு­களில் உள்ள முஸ்­லிம்கள் மத்­தியில் விற்­பனை செய்­வ­தற்கு ஹலால் – முஸ்­லிம்­க­ளுக்கு ஆகு­மாக்­கப்­பட்­டது என்ற சான்று அவ­சி­யப்­ப­டு­கி­றது. எனவே இப்­படி சான்­றிதழ் வழங்­கு­வது சட்­டத்­துடன் மோதக்­கூ­டிய ஒன்­றல்ல. 

இந்த நிலையில் எங்கள் பிக்­கு­மார்­களில் சிலர் எங்­க­ளிடம் வந்து “இந்த அரபு சின்னம் பொறிக்­கப்­பட்­டி­ருக்கும்  இஸ்­லா­மிய சமய சான்­றுள்ள உணவு வகை­களை புத்த பக­வா­னுக்கு பூசை வழி­பாடு செய்­வ­தற்கு பொருத்­த­மாக இல்லை….” என்று எம்­மிடம் முறை­யிட்­டார்கள். இதனைத் தொடர்ந்து நாம் உடனே ஹலால் சான்­றி­தழை தவிர்த்துக் கொண்டோம்.

இவ்­வ­ளவு தூரத்­துக்கு விடயம் பாதிக்கும் என்று நாம் எதிர்­பார்க்­க­வில்லை. பெரும்­பா­லானோர் விரும்­ப­வில்­லை­யென்றால் அதனை நாம் ஏற்­றுக்­கொள்ளத் தயாராக இருக்­கிறோம். நாம் அது குறித்து வாதப் பிர­தி­வா­தங்கள் புரி­ய­வில்லை. எமது பக்க நியா­யங்­களைக் கூட முன்­வைக்­க­வில்லை. இந்­நாட்டில் மதச்­சு­தந்­திரம் காணப்­ப­டு­கி­றது.

யாருக்கும் அவ­ரவர் மதங்­களைப் பின்­பற்றக் கூடிய உரிமை இருக்­கி­றது. தாம் விரும்பும்  கொள்­கைக்கு அமைய வாழலாம். அதே­போன்று சட்ட ரீதி­யான விட­ய­மெனில் பெரும்­பான்­மை­யான மக்கள் விரும்­பா­விட்டால் அத­னையும் நாம் ஏற்­கவும் தயா­ராக இருக்­கிறோம்.

இஸ்­லா­மிய சமயம் சிலையை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. சிலை வணங்கக் கூடிய ஏனைய மதங்­களை சேர்ந்­த­வர்­க­ளுக்கு நாம் எந்த சந்­தர்ப்­பங்­க­ளி­லேனும் சிலை செய்ய வேண்டாம் என்று தடுப்­ப­தில்லை. அன்று ஆப்­கா­னிஸ்­தானில் அடிப்­ப­டை­வா­தி­களால் புத்தர் சிலை தகர்க்­கப்­பட்ட போது அதனைக் கண்­டித்து எமது அமைப்பு முதன் முதலில் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டது. எங்­க­ளுக்கு எங்கள் மதத்தைப் பின்­பற்­று­வ­தற்கு இந்­நாட்டின் பெரும்­பான்மை மக்கள் இடம் அளித்­தி­ருக்­கி­றார்கள்.

அடிப்­ப­டை­வா­திகள் அங்கு அவ்­வாறு நடந்து கொள்ளும் போது எங்­க­ளுக்கு இங்கு ஒன்­று­பட்டு வாழக்­கூ­டிய வாய்ப்பு இல்­லாமல் போகும் என்று எடுத்­துக்­காட்­டினோம்.
கேள்வி: பன்­னி­ரண்டு வயதில் திரு­மணம் செய்யும் உரி­மையை முஸ்­லிம்கள் கோரும் தீர்­மானம் குறித்து என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?
இலங்கை பாரா­ளு­மன்­றத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் ஒன்று நடை­மு­றையில் இருந்து வரு­கி­றது. அது இலங்­கையை ஆண்ட ஆங்­கி­லேயர், இங்­கி­ருந்து செல்லும் போது தமிழ், முஸ்லிம் மக்­களின் தேவைகள் குறித்து வின­வினர். அப்­போது “எங்­க­ளுக்கு நிறைய தேவைகள் இருக்­கின்­றன. இருந்த போதிலும் அவற்றை நாம் உங்­க­ளிடம் கேட்­ப­தில்லை. நாம் பெரும்­பான்மை பௌத்த சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் வாழ்ந்து வரு­கிறோம். அதனால் எமது தேவை­களை நாம் அவர்­க­ளிடம் கேட்டுப் பெற்­றுக்­கொள்­கிறோம்” என்று அன்­றி­ருந்த எமது தலை­வர்கள் ஆங்­கி­லே­ய­ரிடம் கூறினர்.

அன்று நாட்­டி­லி­ருந்த பௌத்த தலை­வர்கள் எமது தேவைகள் குறித்து அவ­தானம் செலுத்­தினர். அவ்­வாறு அவர்கள் கண்­ட­றிந்­ததன் விளை­வா­கவே நாட்டின் சட்டம் என்ற வகையில் இஸ்­லா­மிய சம­யத்­தி­லுள்ள முஸ்­லிம்­களின்  திரு­மணச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. 

ஒரு ஆணோ அல்­லது ஒரு பெண்ணோ குழந்­தைகள் கிடைக்­கக்­கூ­டிய பரு­வத்தை அடைந்த பின்னர் மணம் முடிக்­கலாம் என்­றுதான் இஸ்­லா­மிய மார்க்கம் கூறு­கின்­றது. விஞ்­ஞான உலகும் இதனை ஏற்றுக் கொள்­கி­றது. உங்­களால் பார்க்க முடியும். அமெ­ரிக்­காவின் ஒரு­சில பிராந்­தி­யங்­களில் கூட பதின்­மூன்று வய­துக்கு மேற்­பட்ட ஒருவர் தாய், தந்­தையின் அனு­ம­தி­யோடு மணம் முடிக்­கலாம் என்ற நிலை காணப்­ப­டு­கி­றது. உலகில் பல நாடு­க­ளிலும் இந்த நிலைமை இருந்து வரு­கி­றது. 

இலங்­கையில் மலை­நாட்டுச் சட்டம் என்ற ஒன்று இருக்­கி­றது.  நாட்டின் சட்­டமும் இருக்­கி­றது. இவை அனைத்­தையும் பார்க்­கையில் பொறுப்­பு­தா­ரி­களின் அனு­ம­தி­யுடன் பதி­னெட்டு வய­துக்குக் குறைந்­த­வர்கள் மணம் முடிக்­கலாம்.

முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் பன்­னி­ரண்டு வயதைத் தாண்ட வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது பெரும்­பாலும் பரு­வ­ம­டையும் நிலை மேற்­படி வயதில் நிகழ்­வதைக் கருத்திற் கொண்டே கணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்­கையில் பன்­னி­ரண்டு வய­துக்குக் கீழ் உள்ள எத்­தனை பேர் திரு­மணம் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை பரி­சீ­லனை செய்து பார்க்­கலாம். அத்­த­கைய திரு­மணம் எங்­கா­வது இருந்து இருந்து அதுவும் ஒன்று இரண்டு நிகழ்ந்­தி­ருக்­கலாம்.

நான் அறிந்த வகையில் 12 வய­துக்குக் கீழ் எந்­த­வொரு முஸ்லிம் பெண்ணும் விவாகம் ஆக­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­தலாம். இது­வொரு பிரச்­சி­னை­யென்றால் அத­னையும் தீர்த்துக் கொள்­ளலாம். பெரும்­பான்­மை­யி­னரின் கருத்து நியாயம் என்றால் அதனை எங்­களால் ஏற்றுக் கொள்­ளவும் முடியும். 12 வயதில் தான் விவாகம் செய்ய வேண்டும் என்ற விதி­முறை இருப்­ப­தாக கூறு­வதில் உண்­மை­யில்லை. இந்த வயதில் யார்தான் தம் பிள்­ளை­க­ளுக்கு விவாகம் செய்து வைக்­கி­றார்கள்? எனக்கு இரு பெண் பிள்­ளைகள் இருக்­கி­றார்கள். எந்த விதத்­திலும் அவர்­க­ளுக்கு வயதில் திரு­மணம் செய்து வைக்­க­மாட்டேன். அவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்.
 
இன்று உலகம் மாறி விட்­டது. நாம் சவூதி அரே­பி­யாவைப் பின்­பற்­று­வ­தாக இவர்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எங்­க­ளுக்கு சவூதி அரே­பியா தேவை­யில்லை. நாம் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக இந்­நாட்டில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். 

கேள்வி: மேற்­படி விடயம் குறித்து ஆர்ப்­பாட்டம் செய்த தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றி என்ன கூறு­கின்­றீர்கள்?
இலங்­கையில் பல்­வேறு அமைப்­புகள் உள்­ளன. சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள் என்று கூறப்­படும் அமைப்­பு­களும் உள்­ளன. இந்த அமைப்­பு­களின் கருத்­து­களை இந்­நாட்­டி­லுள்ள எல்லா பௌத்த மக்­களும் அங்­கீ­க­ரிக்­கின்­றார்­களா? அப்­ப­டி­யில்லை. தெளஹீத் ஜமாஅத் அமைப்பு, எமது ஜம்­இய்­யத்துல் உலமாவில் அங்­கத்­து­வம் வகிப்பதில்லை.

இவர்­க­ளது தலைமைக் காரி­யா­லயம் தென் இந்­தி­யா­விலே இருக்­கி­றது. அவர்­க­ளது அலு­வ­ல­கமே இங்கும் உள்­ளது. சிறு தொகை­யி­னரே இங்கு உள்­ளனர். சிறு­வர்­களும் கூட பதா­தைகள் ஏந்­தி­ய­வாறு குறித்த ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இவை தவ­றான செயற்­பா­டு­க­ளாகும். எமது முஸ்லிம் அமைப்­புகள் ஒன்று சேர்ந்து இதற்கு எதி­ராக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டன.
கேள்வி: ஒரு சில முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஆயுதம் தரித்த முஸ்­லிம்கள் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதால் அப்­பி­ர­தே­சங்­க­ளுக்குப் போக முடி­வ­தில்லை என்று கூறப்­ப­டு­கி­றதே இது உண்­மையா?
அப்­ப­டி­யி­ருக்­கு­மானால் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தா­தி­ருப்­பது ஏன்? நாம் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்கள். இந்தக் கதையை பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் பரப்பி முஸ்­லிம்கள் மீது சேறு பூசப்­ப­டு­வது தவறு.

 முஸ்லிம் சமூ­கத்தில் அடிப்­ப­டை­வா­திகள் இருப்­பார்­க­ளே­யானால் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்­கை­யெ­டுக்­க­லாமே. அவர்கள் குறித்த தக­வல்கள் இருக்­கு­மானால் பாது­காப்புத் தரப்­பிடம் வழங்கி நட­வ­டிக்கை எடுக்கச் செய்­ய­லாமே! அன்று நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ, ஐ.எஸ்.அமைப்பில் இலங்­கையர் 32 பேர் இருப்­ப­தாக தகவல் வெளி­யிட்டார். நாம் அவரைச் சந்­தித்து மேற்­படி விடயம் குறித்து வின­வினோம்.

அவர்கள் எங்கே இருக்­கி­றார்கள்? அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுங்கள் என்­றெல்லாம் கோரினோம். பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு சமயம் என்ற ஒன்­றில்லை. காலத்­துக்குக் காலம் அவர்கள் மார்க்­கத்தைத் திரு­டு­கி­றார்கள். அக்­கா­லத்தில் கிறிஸ்­தவ சம­யத்தைத் திரு­டிய பயங்­க­ர­வா­திகள் இருந்­தார்கள். யூத எதிர்ப்­பா­ளர்கள் இருந்­தார்கள். இப்­போது இஸ்லாம் மார்க்­கத்தைத் திரு­டிக்­கொண்டு அடிப்­ப­டை­வா­திகள் செயல்­ப­டு­கி­றார்கள். மனி­தர்­களைத் தாக்­கு­வ­தற்கு குண்­டுகள் வைக்கும் படி உலகில் எந்த மதமும் போதிக்­க­வில்லை. 
கேள்வி: இஸ்லாம் மார்க்­கத்­திற்கு எதி­ராக உலக ரீதி­யாக பிர­சாரம்  ஒன்று மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­ற­தல்­லவா?
'இஸ்­லா­மோ­போ­பியா' என்று சொல்­கி­றார்கள். இது­வொரு பெரிய வியா­பார திட்­ட­மாகும். இன்று உலகில் மனி­த­னை­விட பணத்­திற்கே மதிப்­புள்­ளது. பணத்­துக்­காக இனத்­தையும் மதத்­தையும் கூட விற்­பார்கள். கொலை செய்­வார்கள், அந்­த­ள­வுக்கு பலமும் பாரிய செல்வாக்குள்ளதாகவும் பொரு­ளா­தா­ரமே விளங்­கு­கின்­றது.  

ஒரு சில நாடுகள் ஆயுத  விற்­பனை  மூலம் பொரு­ளா­தா­ரத்தைப் பேணிக் கொண்­டி­ருக்­கின்­றன. உலகில் யுத்தம் இல்­லை­யென்றால் ஆயு­தங்­களை விற்­பனை செய்ய முடி­யாது. வல்­ல­ரசு நாடுகள் பயன்­ப­டுத்தும் ஆயு­தங்­களே அடிப்­படை வாதி­க­ளுக்கும் கிடைக்­கின்­றன. அனைத்­தையும் தயா­ரிப்­பது வல்­ல­ரசு நாடு­களே. எனவே எம்மைப் போன்ற அப்­பா­விகள் மீது சேறு பூசு­வதில் பயன் இல்லை. அடுத்த சாதனம் பெற்றோல் பேரா­சை­யாகும். முஸ்லிம் நாடு­களில் அடிப்­ப­டை­வாதம் நிலைத்­தி­ருக்கும் வரை, அடிப்­படை வாதிகள் இருக்கும் வரையில் குறித்த நாடு­க­ளுக்கு ஆயுத விற்­பனை நடந்து கொண்டே இருக்கும். 
கேள்வி: இலங்கை, மேல்­நாட்டு விரோதப் போக்­கு­டைய ஒரு நாடு, அப்­ப­டி­யி­ருந்தும் அவர்­க­ளது பேச்சுக்கு அடி­மைப்­பட்­டுத்­தானா செயல்­ப­டு­கி­றது?
உல­கி­லுள்ள ஊட­கங்­களும் மேல்­நாட்டு சக்­தி­க­ளுக்கு அடி­மைப்­பட்டே இயங்­கு­கின்­றன. பிர­பல்ய இரண்­டொரு ஊட­கங்கள் சொல்­வ­தையே பெரும்­பா­லானோர் செவி­ம­டுக்­கின்­றனர். “நாக்கின் கூர்­மையால் ஒரு­வ­ரை­யொ­ருவர் கொன்று தீர்த்துக் கொள்ளும் யுகம் ஒன்று உலகில் தோன்றும்” என்று முகம்­மது நபி(ஸல்) அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள். நாம் அந்த யுகத்­தில்தான் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம் என்­று நான் நினைக்­கிறேன்.

நான் ராஜ­கீய வித்­தி­யா­ல­யத்­திலே கல்வி பயின்றேன். நான் அங்கு பௌத்த, கிறிஸ்­தவ, இந்து நண்­பர்­க­ளு­டனே பழ­கி­யி­ருக்­கிறேன். அவர்­களுள் பௌத்­தர்­களே அதி­க­மா­ன­வர்கள். 

முஸ்­லிம்கள் மிகவும் குறைந்­த­வர்­களே. நாம் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தேகக் கண்­க­ளுடன் நோக்­க­வில்லை. இன்­று­வ­ரையும் அந்த உறவு தொடர்­கி­றது. ஆனால் ஒன்­றாக இருப்­ப­வர்­க­ளி­டையே சந்­தே­கப்­பார்­வையை உண்­டு­பண்ணும் விதத்­திலும் ஒரு­வ­ரை­யொ­ருவர் பிரித்து வைப்ப­தி­லுமே இன்று பெரும்­பா­லான ஊட­கங்கள் செயல்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­துடன் குரோத மனப்­பான்­மையை உண்டு பண்ணி மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வ­திலும் ஊட­கங்கள் பங்­க­ளிக்­கின்­றன. கடந்த வாரம் முன்­னணி ஞாயிறு பத்­தி­ரி­கை­யொன்றில் அடிப்­ப­டை­வாத முஸ்லிம் நபர் ஒரு­வரின் நேர்­காணல் இடம்­பெற்­றி­ருந்­தது.

அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ கூறி­யி­ருந்த கூற்­றுக்கு அதில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அதற்கு விரோ­த­மாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கு சம­நிலை வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஏன்? நாம் கொடுத்த அறிக்­கை­யையும் கூட வெளி­யி­ட­வில்லை. பெரும்­பா­லான ஊட­கங்கள் இப்­ப­டித்தான் நடந்து கொள்­கின்­றன.
கேள்வி: முஸ்லிம் மக்­க­ளுக்கு விரோ­த­மான தக­வல்கள் வெளி­யி­டு­வது, தர்­ஹா­நகர் தாக்­குதல் போன்ற நிகழ்­வு­களால் முஸ்­லிம்­க­ளது மனம் புண்பட்டிருக்கிறதா?
மனிதர்கள் என்ற வகையில் பெரிதும் மனவேதனை ஏற்படுவதுண்டு. இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் முன்வைக்கும் திரிபுபடுத்தப்பட்ட கதைகளை நாம் இப்போது செவியுற்று வருகிறோம். குர்ஆன் வசனங்களின் சிறு பகுதியை மாத்திரம் முன்வைத்து தர்க்கம் புரிய வருகிறார்கள்.

நாம் வாழ்ந்த பௌத்த சூழல் இதுவல்ல, நாம் ஒற்றுமையுடனே இருந்தோம். பெரும்பாலான பௌத்த மக்களது நிலைப்பாடு இப்படி அமைவதில்லை என்பதை உண்மையிலே நாம் அறிவோம். இப்பிரச்சினையை சண்டை பிடித்துத் தீர்த்துக் கொள்ள முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். 

பெரும்பான்மையான பௌத்த மக்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதை நாம் எங்கள் முஸ்லிம் மக்களிடம் கூறிவருகிறோம். அதனால் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். அண்மையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைக் கேள்விப்பட்டேன். முஸ்லிம் பெண் பிள்ளையொன்று பர்தா அணிந்தவாறு பஸ்வண்டியொன்றில் ஏறியபோது ஒருவர் குறித்த பெண் பிள்ளையை இனவாத அடிப்படையில் திட்டியிருக்கிறார்.

அந்த சந்தர்ப்பத்திலே பஸ்வண்டியிலிருந்த ஏனைய சிங்கள மக்கள் குறித்த நபரைக் கண்டித்து பஸ் வண்டியிலிருந்து விரட்டியிருக்கிறார்கள். இது நல்லிணக்கத்துக்கு ஆரோக்கியமான விடயமாகும். எங்களைக் கொலை செய்வதாக தீ மூட்டுவதாக அச்சுறுத்தல் செய்தவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் எங்கள் பக்கம் சார்பாக பேசியவர்களும் இருக்கிறார்கள். அடிப்படைவாத சிறுகூட்டத்தினர் மத்தியில் எம் சார்பாக பெரும்பாலான பௌத்த மக்கள் இருக்கிறார்கள் என்பதால் நாம் இலங்கையர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறோம்.
நன்றி:ராவய
04.12.2016
Previous Post Next Post