Top News

மத்திய கிழக்கில் கஷ்டப்பட்டு இளைஞர்கள் உழைக்கும் றியால்களின் கண்ணீர்க்கதை



வெறும் செய்திகள், தகவல்கள் என்றில்லாமல் சமூக விழிப்புணர்வு செய்யும் அண்மைக்காலமாக பதிவிட்டு வருகின்றோம். அந்த அடிப்படையில் மத்திய கிழக்கில் கடும் வெயிலிலும், கடும் குளிரிலும் நொந்து உழைத்து அனுப்பும் றியாலகளின் கண்ணீர்க்கதையினை உங்களுக்கு விழிப்புணர்வுக்காக தருகிறோம்.

தனது சொந்த ஊரை விட்டு வெளியூரக்கு வேலைக்கு போவது என்றாலே அது கஷ்டம்தான், காரணம் அடிப்படை தேவைகளை சரியாக செய்து கொள்ள முடியாது. அந்த ஊரின் காலநிலை, அந்த ஊர் மக்களின் மனோநிலை, மொழி இப்படி அடுக்கடுக்கான பிரச்சினைகள். இது நாட்டிற்குள் இருக்கும் வெளியூருக்கு சென்றால் வரும் கஷ்டங்கள். இதனை தாண்டி வெளிநாடு சென்றால் இதை விட பலமடங்கு சோதனை.

இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை அதிகமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக அல்லது வேலை தேடி செல்கின்றனர். வேலைக்காக செல்பவர்கள் பரவாயில்லை, தேடிச் செல்பவர்கள் நிலையோ பரிதாபம். மத்திய கிழக்கை பொறுத்தவரை அதிக வெப்பம், அதிக குளிர் இருக்கும் ஒன்றில் அது அல்லது இது இரண்டுமே எம் நாட்டவர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது உழைக்க வந்துவிட்டோம் இரண்டு வருடங்கள் இருந்துதானே ஆகவேண்டும்.

நாட்டில் தங்கைக்கு வீடு கட்ட வேண்டும். சீதனம் கொடுக்க வேண்டும், பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும், சகோதரங்களுக்கு அதிநவீன செல்பேசிகள் வேண்டும், மனைவிக்கு நகை வேண்டும், உற்றார் உறவினர்க்கு இனிப்பு பண்டங்கள் வேண்டும், நண்பர்களுக்கு அடிக்கடி பணம் வேண்டும் இப்படி ஆயிரக்கணக்கில் மனதில் இருக்கும் சுமைகளும் ஆசைகளும். இந்த பெரிய சிறிய ஆசைக்கெல்லாம் சேர்த்து உழைக்க வேண்டும் பங்காளி, எமனி, ஈரானி, மசறி, அரபி யிடமிருந்து திட்டு வாங்க வேண்டும். காலையில் குளிரோ வெப்பமோ எழும்ப வேண்டும், மெஸ்ஸில் சாப்பிட வேண்டும். பழங்கறி, கோதுமை இவையெல்லாம் உணவு என்ன செய்வது. துாங்குவதற்கு  சிறிய இடம். நேர்பாட்டில்தான் துாங்கலாம் அசைந்து துாங்க முடியாது. கஷடத்தை வெளியில் சொல்ல முடியாது.அனைத்தும் அந்த றியாலுக்குதான்.

தயவு செய்து கண்ணீருடன் உழைத்து அனுப்பும் உங்கள் மகனின், கணவனின், சகோதரனின் பணங்களை வீணாக செலவு செய்ய வேண்டாம். 
Previous Post Next Post