மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாம், மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தாலும் முஸ்லிம் கட்சியொன்றின் அல்லது தனிப்பட்ட ஒருவரை மானபங்க படுத்துவது இஸ்லாமிய அடிப்படையில் தவறாகும். இதனை பகிரங்கப் படுத்தாமல் தனிப்பட்ட ரீதியில் எழுத்து மூலம் அறிவித்து செய்ய நினைத்த காரியத்தை சாதித்திருக்கலாம். முஸ்லிம் என்ற பெயரை வைத்து இன்று அரசியல் நாசகார செயல் செய்வது வழக்கமாகிவிட்டது
‘தாருஸ்ஸலாம் : மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகள் – முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தினருக்கும், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமாக தாருஸ்ஸலாம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றினையும், மு.காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் இடம்பெற்று வரும் மோசடிகள் பலவற்றினையும் சட்ட ரீதியான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் வகையில், இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘தாருஸ்லலாம் மீட்பு முன்னணி’ எனும் பெயரையுடைய அமைப்பு, இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தொடர்பில், மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், பல்வேறு மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று, இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றுக்கான ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மு.காங்கிரஸ் எனும் கட்சியைப் பயன்படுத்தி, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் எவ்வாறெல்லாம் முறைகேடான முறையில் சொத்துக்களையும், நிதிகளையும் ஈட்டியுள்ளார் என்பதையும் இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது.