Top News

பசீர் சேகுதாவூத் ராஜபக்ச றெஜிமண்டின் அஜெண்டாவில் இயங்குகிறாரா?


ஷேக் மிஷாரி
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தவைர் ஹக்கீமுக்கும் இடையில் பாரிய பிரச்சினை நிலவிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் பிரித்தாளும் சக்திகள் மூலம் சிறிய சிறபான்மை கட்சிகளின் பலம் உடைத்து வெற்றிகாணும் சிங்கள தலைவர்களின் ஆதிக்கம் இந்த பிரச்சினையிலும் இருப்பதாக உணரப்படுகிறது.

அண்மையில் தாறுஸ்ஸலாம் மோசடி குறித்து ஒரு நுால் வெளியாகியது, இந்த நுாலின் பிரிண்ட் ஒன்றுக்கு எப்படியும் 100 ரூபாய் செலவிடப்பட்டிருக்கும் 5000 க்கும் அதிகமான பிரதிகள் பிரிண்ட் செய்யப்பட்டதாம் அப்பயெனில் ஐந்து இலட்சம் செலவிடப்பட்டிருக்கும் இந்தப்பணம் யாருடையது? அது மாத்திரமின்றி இப்படி இறங்கி செய்வதற்கு பாரியதொரு அரசியல் சக்தி பின்னால் இருக்க வேண்டும் அந்த சக்தி யாருடையது?

பசீர் சேகுதாவூத் மஹிந்த அரசில் பிரதியமைச்சராக செயற்பட்டவர், மஹிந்த ரெஜிமண்டுக்கும் அவருக்குமான தொடர்பு நெருக்கமானது. அதே அஜெண்டாவில் இப்போதும் இயங்கி மு.கா வை கைப்பற்ற திட்டமா? இப்படியான கேள்விகளுக்கு மத்தியில் ஏன் இந்த மோசடி விவகாரத்தை இவ்வளவு நாளும் வெளியிடவில்லை.

இதற்கிடையில் பசீர் சேகுதாவூத் வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அனைத்து பூர்வாங்க வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அந்த நிலையத்திற்கு கெபிடல் எப்.எம் என பெயரிடப்பட்டுள்ளதாம்.
Previous Post Next Post