தலைவர் மர்ஹூம் அஸ்ரப் மரணித்த பிறகு தலைமைப் பதவி சண்டை ஆரம்பித்த கலகட்டத்தில் எனக்கு தலைமை பதவியை தாருங்கள் எனக்கு நப்ஸ் துடிக்கிறது என்று கேட்டுப் பெற்றுக் கொண்ட பிறகு அடுத்த கனம் தன் ஹக்கீம் பொருத்தமானவரா என எண்ணத்தோன்றியது என கவலையுடன பகிர்ந்தார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா.தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குறித்து குறிப்பிட்ட கருத்துக்களில் இருந்து ஒரு சில..
தான் ஒரு வரலாற்று தவறை செய்து விட்டதாக இன்றும் நினைத்து கவலைப்படுவது அதுதான் என்கிறார் அதாஉல்லா, காரணம் எப்போது ரணிலுடன் கூட்டுச் சேர கூடாது என்ற தலைவரின் கொள்கையை புறக்கணித்தாரோ அன்றே அவரை பதவியில் இருந்து மக்கள் துாக்கியிருக்க வேண்டும். ஆனால் தலைவர் அஷ்ரபின் கட்சி என்பதற்காகவே மக்கள் மு.காவை வெறுக்கவில்லை.
இன்று வரைக்கும் முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளையும் ஏமாற்றி அரசியல் செய்யும் ஹக்கீம் நாடகங்களும் நடிக்கிறார் அதில் ஒன்றுதான் தேசியப்பட்டியல், அதுவும் அட்டாளைச் சேனை தேசியப்பட்டில்.
அட்டாளைச்சேனை மக்களும் அக்கரைப்பற்று மக்களும் நினைத்தால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும், 3 மாகாண சபை உறுப்பினர்களையும் பெறமுடியும். ஒருபோதும் அது நடந்துவிடாது காரணம் நாம் நம்பியிருப்பது கொழும்பு கண்டி தலைமைகளை தலைவர்களை நாங்களே உருவாக்க வேண்டும். தலைவர்கள் சொல்லக்கூடாது நாங்கள் தலைவர்கள் என்று இதுதான் அரசியல். இதுதான் அஷ்ரப் காட்டிய வழி.
நப்ஸ் கேட்கிறது என்றுகேட்டுப்பெற்றுக்கொண்ட ஹக்கீம் இன்றுவரை அவர் நப்ஸ்காகவே அரசியல் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் துயிலில் இருந்து கண் விழிக்காதவரை அரசியல் வாதிகள் குளிர் காய்ந்து கொண்டே இருப்பர்.