முஸ்லிம்கள் குறித்த விடயங்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்

NEWS


இன்று பெரும்பாலாக முஸ்லிம்கள் குறித்து பல்வேறுபட்ட சிக்கலான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது, முஸ்லிம்கள் இனவாதிகள், தீவிரவாதிகள், பிரச்சனைக்குரியவர்கள் என பல்வேறான கருத்துக்கள் பதிவேற்றப்படுகிறது. இதற்காக நிதி பகிரப்பட்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைததளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படகிறது. வில்பத்து பிரச்சினையும் அவ்வாறுதான்.

இஸ்லாமிய பாரம்பரியம், கலாச்சாரம், தனித்தன்மை, அண்ணலாரின் அன்பு வார்த்தைகள், சமூக ஒற்றுமை எமது வரலாறு குறித்து இலங்கையின் முதல் மொழியா சிங்களத்தில் ஆக்கங்களையும், ஒலி ஒளி தயாரிப்புக்களையும் வெளியிட வேண்டும் குறைந்தது எழுதல் வேண்டும் சிங்களம் தெரிந்த சகோதரர்கள் இதனை செய்ய வேண்டும்.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பாரம்பரிய குடிமக்கள் இதற்காக இவற்றை ஆவணப்படுத்த வேண்டியதேவையும் எமது இஸ்லாத்தை ஏனையோருக்கு போதிக்க வேண்டி தேவையும் எமக்கு இருக்கிறது. ன்சா அல்லாஹ் இதற்காக இணைவோம் பணியாற்றுவோம். எமது சிலோன் முஸ்லிம் ஊடகம் மூலம் பணியாற்ற விரும்புவோர் அழைக்கவும் 0777391229
6/grid1/Political
To Top