Top News

சிலோன் முஸ்லிமின் "எமது நிலங்களை பாதுகாப்போம்” பிரச்சாரப்பணி




இலங்காபுரி, சரண்டிப், சஹிலான், சிலோன்,சைலான், ஜஸிரதுல் யாகூத் (மரகதத்தீவு), இந்துமகாசமுத்திரத்தின் முத்து, என வருணிக்ப்படுகின்ற, நதிநரம்புகள் படந்து, காட்டின் கனத்தபச்சைப் போர்வைகளை இறுகப்போற்றிக்கொண்டு, சுவனத்துப்பட்சிகளும்,மனங்களிக்கும் மலர்களும், கடல்படுதிரவியம், காடுபடுதிரவியம் எனஅனைத்துவளங்களும் ஒருங்கேசேர்ந்த அழகியதீவினுள்ளே, பாவாதமலையில் மறைந்திருக்கின்றது உலகமானிட இரகசியம்.இந்த அழகிய செரண்திப் தீவுக்கும் முஸ்லிம்களுக்குான தொடர்பு ஆதம் நபி முதல் ஆரம்பிக்கிறது யாரும் எம்மை வந்தேறு குடிகள் என்று சொல்லாத அளவுக்கு நாங்கள் உலகின் ஆரம்ப குடிகள் அதுவும் இலங்கையின் பழங்குடிகள் என்ற அந்தஸ்தை பெறுகிறோம்.

வரலாறு இப்படியிருக்கின்ற போது நாங்கள் குடியேற்றங்களை அமைப்பதற்கு காடுகளை அழித்தோம் என்கின்ற கருத்து சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது, இலங்கை வாழ் ஏனைய குடிகளுக்கு கற்பித்தவர்கள் முஸ்லிம்கள் இதனையும் தாண்டி வியாபாரம் எனும் விடயத்தை போதித்தவர்கள்.

பண்டைய காலம் தொட்டு அதாவது இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வந்தவர்கள் முஸ்லிம்கள் ஆனால் இலங்கையை கைப்பற்ற நினைக்கவில்லை, இலங்கையை ஒரு பொக்கிசமாக பார்ததனர். 

சிங்கள மக்களோடு அன்பாலும் பண்பாலும் பின்னிப்பிணைந்து காணப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு பல்லாயிரம் உதாரணங்கள் உண்டு. இன்று வில்பத்துவில் காடழிக்கிறோம், கூரகலவில் பள்ளி கட்டியிருக்கிறோம், தம்புள்ளயில் பள்ளி கட்டியிருக்கிறோம் என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது இது வெறும் பிரச்சாரங்கள் அல்ல பாரிய சதி முயற்சி இதற்கு பாரிய எதிர்ப்பை காட்ட வேண்டும். எமது நிலங்களை காக்க முன்வரவேண்டும். 

இந்த பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுக்க சிலோன் முஸ்லிம் தொடங்கிவைக்கிறது. #SAVEMUSLIMS
Previous Post Next Post