ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வசந்தம் தொலைக்காட்சி அதிர்வு நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
“அன்று ரவூப் ஹக்கீமே முஸ்லிம் காங்கிரஸை பாதுகாக்க வேண்டும் என்ற தேவை காணப்பட்டது. ஆனால், இன்று ரவூப் ஹக்கீமிடமிருந்தே முஸ்லிம் காங்கிரஸை பாதுகாக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.”
ஒரு கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு அந்தக் கட்சியின் தலைமையை இவ்வாறு வெளியில் விமர்சிப்பது அரசியல் நாகரிகமான செயல் அல்ல முதலில் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு அவர் விமர்சிப்பாராயின் அது வேறு விடயம் என்பதே எனது கருத்து. எந்தக் கட்சியைச் சேர்ந்த எவராக இருந்தாலும் சரிதான். –