தேசிய காங்கிரஸின் கோட்டை என கருதப்படும் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவை மீண்டும் தேசிய காங்கிரஸ் வசம் வருமா என்ற கேள்வி நிலவுகிறது. காரணம் அதிகாரம் இன்றியிருக்கும் தேசிய காங்கிரஸ் அடுத்த தேர்தல் ஒன்றை எவ்வாறு முகம் கொடுக்க போகிறது என்ற கேள்வி எல்லோர்க்கும் உண்டு. அதே போல பணபலமும் தேவை அதிகாரமற்ற கட்சிக்கு யார் முதலீடு செய்ய போகிறார்கள் என்ற சந்தேகமும் உள்ளது.
இவற்றையெல்லாம் தாண்டி அக்கரைப்பற்றை பொறுத்தவரை அதாஉல்லா தான் கிங் என்ற போக்கு இருக்கிறது. சேவையின் சிகரம் என்ற வர்ணிக்கப்படும் அதாஉல்லாவை மீள அதிகாரத்தில் அமர்த்துவதே மீதமுள்ள தேசிய காங்கிரஸ் போராளிகளின் நோக்கு.
அந்த அடிப்படையில் தேசியப்பட்டியலை தவிர வாக்குகள் மூலம் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உறுப்பினராவது குதிரைக்கொம்புதான். மாகாண சபையில் களமிறங்கி முதலமைச்சர் என்ற கனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்காது. அப்படியெனில் இறுதியிலிருப்பது மாநகர சபை தேர்தல்.
உள்ளுராட்சி தேர்தலில் அககரைப்பற்றில் தேர்தல் பிரச்சாரம் இல்லாமலே அதாஉல்லா மேயராக முடியும், பணமும் செலவாகாது, சபையையும் கைப்பற்றலாம் பின்னர் மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என பாதையை மீள் ஒழுங்கமைக்க முடியும். இந்த முடிவை அதாஉல்லா எடுப்பது என்பது மிகவும் அரிதானது. அரசியல் இருப்பை தக்கவைக்க இதை தவிர அவருக்கு இறுதி துருப்பு இல்லை.
இது வெறும் யூகமே தவிர கட்சியின் அல்லது அவரின் தனிப்பட்ட முடிவும் இல்லை, இதுதான் யதார்த்தமும் கூட.