சமீர் சேகு
உலகிலுள்ள முக்கியமான ஏழு முஸ்லிம் நாடுகள் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க கூடாதென டொனல்ட் டிரம்ப் விதித்த தடை உத்தரவினால், உலகில் முன்னணி நிறுவனங்களான கூகுல் நிறுனம், மைக்ரோ சொப்ட் நிறுவனம் என்பன தமது ஊழியர்களை முஸ்லிம் நாடுகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் இந்த தடை உத்தரவை டிரம்ப் அறிவிப்புச் செய்திருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு காரணமாக உலகம் முழுவதும் தனது ஊழியர்களைக் கொண்டுள்ள முன்னணி நிறுவனங்களான கூகுல், மைக்ரோசொப்ட் என்பன பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டிரம்பின் தீர்மானத்தினால் இந்த நிறுவனங்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.