Top News

மு.கா தலைமையை பசீருக்கு வழங்க கோரிக்கை - கிழக்கின் மீள் எழுச்சி




முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளில் சிறந்தவர் பசீர் சேகுதாவூதே என்று கிழக்கின் மீள் எழுச்சி தெரிவித்துள்ளது.

வபா பாறுாக் மற்றும் அஸூர் ஆகியோர் ஆரம்பித்த கிழக்கின் எழுச்சி புஸ்வானமாக போனமைக்கு காரணம் ஹசன் அலியே என்றும், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கேட்கவே கிழக்கின் எழுச்சி உருவாக்கப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பு பசீரை தலைவராக்காடில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை ஹக்கீம் சந்திக்க வேண்டிவரும் என அந்த எச்சரித்துள்ளது.

இந்த எழுச்சி என்பது ஹக்கீமிற்கு எதிரானதோ மு.கா வுக்கு எதிரானதோ அல்ல மாறாக ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு எதிரானது, தொடர்ந்து மக்களை ஏமாற்றிவரும் பணமுதலைகள் ஓயும் வரை எமது போராட்டம் கலையாது என கிழக்கின் மீள் எழுச்சி குறிப்பிட்டுள்ளது,

Previous Post Next Post