Top News

மௌலவி ஆசிரியர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் ஹக்கீம் உறுதி



ஜிஹான் முஹம்மட்

மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் சந்தித்து கலந்துரையாடியது.
இதன்போது நடளாவிய ரீதியிலுள்ள மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பான மீள் பரிசீலனை தொடர்பாகவும் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அனஸ் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.
மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து தான் பிரதமரிடம் பேசியுள்ளதாகவும் விரைவில் இதனை அமுல்படுத்தி தருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.
Previous Post Next Post