Top News

தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத வைத்தியசாலை நிந்தவூரில் திறப்பு

பிறவ்ஸ் முஹம்மட்

தொற்றா நோய்க்கான இலங்கையின் முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை இன்று சனிக்கிழமை (28) நிந்தவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது.

8 ஏக்கர் வயல் காணி மண் நிரப்பப்பட்டு 192 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத்தில் இந்த வைத்தியசாலை சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வைத்தியசாலை மூலம் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான சேவைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் தiமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.ஏல். நஸீர்;;, மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், அப்துல் றஸாக் (ஜவாத்), ஐ.எல்.எம். மாஹிர், மு.கா. மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், மு.கா. உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ., ஏ.சி. யஹியாகான், ஹனீபா மதனி, முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.





Previous Post Next Post