கஷ்டப்பட்ட கல்முனை மீனவர்களுக்கு உதவி வழங்கியதால் மீனவர்கள் புன்சிரிப்பு

NEWS
எஸ்.அஷ்ரப்கான்

மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று (2017/01/28) கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் .ஹரிஸ் அவர்களின் அழைப்பின்பேரில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



6/grid1/Political
To Top