உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகி அதிகப்படியான முஸ்லிம் மாணவர்கள் மருத்துவ, பொறியியல், வணிக, கலை, தொழில்நுட்ப பிரிவுகளில் சித்திபெற்றுள்ளனர் அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பில் பாராட்டுக்கள்.
உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அதியுச்ச சித்தி, நடுத்தர சித்தி, சாதாரண சித்தி அடிப்படையில் செல்ல காத்திருக்கின்ற மாணவர்களை கல்யாணம் பேச ஆரம்பித்துள்ளனர் சில சீதனப் பிசாசுகள்.
மருத்துவராக, இன்ஜினியராக தேர்ந்துள்ள மாணவர்களுக்கு அதிக கிராக்கி, ஏனைய வணிக, கலை பட்டதாரிகளுக்கும் ஒரு விலை மதிப்பு.
எந்தளவுக்கு என்றால் மருத்துவ பீட மாணவர்களுக்கும், பொறியியல் பீட மாணவர்களுக்கும் 50 இலட்சம் சீதனம், கார், வீடு, படித்து முடிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்பு, அதி நவீன போன், லப்டொப் அத்தோடு மணமுடிக்க பெண் அந்த பெண்ணுடன் 24 மணி நேரமும் கதைக்கலாம், வீட்டிற்கு வந்து போகலாம் (சுப்ஹானல்லாஹ்) இதற்கு பெயர் பேசி வைத்தலாம். இதே போல கலை வணிக பீட மாணவர்களுக்கு இதில் அரைவாசி அல்லது கால்வாசி.
முன்னர் மிக மிக குறைவாக இருந்த இந்த பாவம் இன்று அதிகரித்துள்ளது, முஸ்லிம்களிடத்தில் அடிப்டையில் ஈமான் இல்லை. அதனால் எங்களுக்கு ஆயிரம் சோதனை. நாங்கள் பாவங்களை செய்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை என்று அல்லாஹ்விடம் மன்றாடுவது என்ன நியாயம்.
சீதனம், மறைமுக சினா, போன்றவை முற்றிலும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று, இன்னுமொருவரை பலாத்காரமாக பாவத்தின்பால் அழைப்பது அதை விட பெரிய பாவம் அல்லாஹ் இப்படியான பாவங்களில் இருந்து எம்மை பாதுகாப்பானாக.
திருமணம் அல்லாஹ்வின் நாட்டத்தில் இடம்பெறுவது நாங்கள் பதட்டப்பட தேவையில்லை. தகுதியான ஜோடியை இறைவன் சேர்த்து வைப்பான். அதில் மருத்துவர், பொறியியலாளர் என்றில்லை.