Top News

இசை ஹராமா? ஹலாலா?




ஹபீசுல் ஹக் (பாதிஹ்)

இன்று இஸ்லாமிய சட்ட அறிஞர்களிடத்தில் இசை ஹராமா?  ஹலாலா? என்பதில் பல கருத்து வேறுபாடுகள்  உள்ளது. இது சம்பந்தமாக 19 ஹதீஸ்கள் வந்துள்ளது இதை சொன்ன அறிவிப்பாளர் பற்றி ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில்  அதிகமான  விமர்சனங்கள் உள்ளது .   ஆனால் பாடல் இஸ்லாத்தில் ஹராமா ? என்றால் ஹராம் இல்லை . ஆனால் இசை ஹராமா என்கின்ற போது பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது . ஒரு சில அறிஞர்கள் கூடாது என்கிறார்கள் .  இன்னும் சிலர் கூடும் என்கின்றார்கள் . 

நபிஸல் அவர்களின் வரலாற்றைப் பார்கின்றபேது அதிகமான ஆதாரங்கள் உள்ளது   ஆயிஷா (றழி ) அவர்கள் கூறும் ஹதீஸ்  ஒருமுறை  அன்ஸாரித் தோழர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களிடம்  ஆயிஷாவே ! உங்களிடம் கேளிக்கைகள் ஏதுமில்லையா ? ஏனெனில் , அன்ஸாரிகள் கேளிக்கைகளை பெரிதும் விரும்புவர்கள் . (புஹாரி)
இது இமாம் நஸாஈ (றஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸ் .  அஸ்ஸா பின் யஸீத் (றழி ) அவர்கள் கூறுகின்றார்கள்  ஒருமுறை
நபிஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்தாள் . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷாவே இது யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதரே எனக்குத்தெரியாது என்றார்கள் . இவர் ஒரு பாடகி . நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்குப்பாடிக்காட்டுவார் என்றார்கள் . பின்னர் அப்பெண் ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் .
மேலும் நபிஸல் அவர்களின் காலத்தில் ஹஸ்ஸான் இப்னு தாபித் என்ற கவிஞர் இருந்தார் . இவர் யுத்தங்களின் போது எதிரிப்படைகளை வீழ்த்துவதற்காக தனது கவிதையைக் கொண்டு வசை பாடுவார் . இப்படியெல்லாம் பாடல்கள் நபிஸல் அவர்களின் காலத்தில் பாடப்பட்டது .
இன்று இசை கூடாது     என்பவர்கள் ஒரு ஹதீஸை வைத்து  ஆதாரம் காட்டுவார்கள்  '' ஒரு காலம் வரும் அது இசையையும் , ஆண்கள் பெண்கள் கலந்திருப்பதையும் , மது அருந்துவதையும் ஆர்வமாகிக் கொள்வார்கள் .( ஹதீஸ் )  இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை உறுதியற்றது . எனவே இதை வைத்து  இமாம் இப்னு ஹஸ்ம் , இமாம் தஹபி போன்ற சில  அறிஞர்கள் இது கூடாது என்கிறார்கள் .
சில இமாம்களின் கருத்து

01 )  இமாம் அபூஹனீபா ( ஹராமல்ல வெறுக்கத்தக்கது )
02 ) நீதிபதி , சட்ட அறிஞர் , ஹதீஸ் வல்லுனர் . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரீ (றஹ்) இசை ஆகும் என்கிறார் .
03) இமாம் ஷாபிஈ வெறுக்கத்தக்கது . இப்படியெல்லாம் கருத்துக்களை இமாம்கள் கொண்டுள்ளனர் .
ஆனால் நவீன கால அறிஞர்கள் ஆகும் என்கிறார்கள் . காரணம் நான் மேற்கூறிய ஹதீஸைப் பொறுத்தவரையில் அதுபற்றி அதிகமான கருத்து வேறுபாடுகள் உள்ளது . இதன் காரணமாக இமாம் கஸ்ஸாலி . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரி . அதேபோல் தற்கால அறிஞர்களான கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி , கலாநிதி முஹம்மத் இமாரா , போன்ற பல அறிஞர்கள் கூடும் என்கிறார்கள் . விதிவிலக்கிற்கு அமைய இசை கூடும் என்கிறார்கள் .


குறிப்பு :- நாம் கேற்கின்ற இசைக்கு சில வரையறை உள்ளது .
உ+ம்   01) இஸ்லாமிய ஷரியாவின் வரையறையுடன் இருத்தல் வேண்டும் . ( காம உணர்வை தூண்டாமல் இருத்தல் வேண்டும் . )
எனவே இசைபற்றி தற்கால அறிஞர்களின் கருத்துக்கேற்ப இசை ஹராமல்ல ஆனால் சில வரையறைகள் உள்ளது .
Previous Post Next Post