File Image: SLC HC MEMBERS |
அம்பாறை மாவட்டத்திற்கு தேசியப்பட்டில் வழங்கப்படுகிறபோது அட்டாளைச்சேனைக்கு முக்கியத்துவம்- அமைச்சர் ஹக்கீம் ( கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் உரையாற்றியது )
அம்பாறை மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிற பொழுது அந்த பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் தேவையில்லை- அமைச்சர் ஹக்கீம் (கடந்த மாதம் வசந்தம் தொலைக்காட்சியில் கூறியது )
ஹசனலிக்கே தேசியப்பட்டியல் காரணம் அவர்தான் மூத்த உறுப்பினர், கட்சிக்காக பாடுபட்டவர்- அமைச்சர் ஹக்கீம் (தற்போதய நிலைப்பாடு)
இதற்கிடையி்ல் ஹபீஸ் (ஹக்கீமின் சகோதரர்), சல்மான் ( ஹக்கீமின் அனைத்துமானவர்) தௌபீக் ( உறவுக்காரர்) இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இதில் ஹபீஸ் இராஜினாமா செய்துவிட்டார். அடுத்தது சல்மான் இராஜினாமா செய்யும் படலம். இவையெல்லாம் அரசியல் உலகில் மாபெரும் நாடக அரங்கேற்றம் தேர்தலில் மக்கள் வாக்களிப்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கே மாறாக அரசியல்வாதிகளின் பாக்கெற்றுகளை நிரப்ப அல்ல. ஒரு பிரதேசம் எந்தவித இலாபமும் இன்றி கட்சிக்காக தியாகம் செய்து கொண்டிருப்பது என்றால் அது அட்டாளைச்சேனையும் முஸ்லிம் காங்கிரசும்தான்.
மறைந்த தலைவர் அஸ்ரபை தோளில் துாக்கிவைத்து நடந்த ஊர், காலா காலமாக முஸ்லிம் காங்கிரசுக்காக வாக்களித்து வருபவர்கள் பக்கத்தில் அதிகாரமுள்ள அமைச்ச் இருந் பொழுதும் அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி துாய கட்சியின் போராளிகள் இவர்களை வைத்து நாடகமாடி அவர்களை வைத்து அரசில் செய்வது அழகுமல்ல சரியுமல்ல. ஒன்றில் கொடுக்க வேண்டும் அல்லது இல்லையென்று சொல்ல வேண்டும்.