எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்தானை பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ளபள்ளிவாசலைச் சுற்றிவர தொல்லியல் திணைக்களத்தினர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் எல்லை வேலிஇட்டதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்டு வந்த அசாதாரண நிலை தற்போது முடிவிற்குகொண்டுவரப்பட்டுள்தாகவும் இதற்கான நடவடிக்ககையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
அதற்கமைவாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீமிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று(25) இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது பொத்தானைப்பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் தடை நீக்கப்பட்டதுடன், அதற்கான தடை அறிவித்தல்பலகையினையும் அகற்றுவதெனவும் தீர்வுகள் எட்டப்பட்டன.
இவ்விடயம் பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் குறிப்பிட்ட பள்ளிவாசலைச் சுற்றிவர எல்லை வேலி இடப்பட்டதுடன்,இப்பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதெனவும் இதனை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் கடந்த ஒருமாத காலப்பகுதிக்கு முன்னர் இப்பிரதேசத்தில் அறிவுறுத்தல் பலகை இடப்பட்டிருந்தன.
கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலில் தாம் மதக்கடமைகளைநிறைவேற்றி வந்த வேளையில் பள்ளிவாசலினையும் அதற்கான அடிப்படைத் தேவைகளையும் அமைக்கும் வகையில்கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடந்த டிசம்பர் மாதம் 07ஆம் திகதி இப்பகுதிக்கு வருகை தந்ததொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வணக்கஸ்தலத்தினைச் சுற்றிவர எல்லையிடப்பட்ட கற்களையும் அறிவுறுத்தல்பலகையினையும் இட்டமையினால் இப்பிரதேசத்தில் அசாதாரண நிலை தோன்றியது இவ்விடயத்தினை பிரதேச மக்கள்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தததைத் தொடர்ந்து மாகாண சபைஉறுப்பினர் மு.கா தலைவருக்கு நிலைமையினை எடுத்துகூறினார்.
இந்நிலைமையினை நேரில் சென்று ஆராயும் பொருட்டு அண்மையில் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் அழைப்பின் பேரில்அப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். நுpலைமையினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ரவூப்ஹக்கீம் இப்பிணக்கிற்கான தீர்வினை எட்டும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.
மதக் கடமையினை இனிவரும் காலங்களில் தங்கு தடையின்றி நிறைவேற்றும் வகையில் நடவடிக்கையினைமேற்கொண்ட மு.கா தலைரும் அமைச்சருமாக ரவூப் ஹக்கீமிற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்இதவத்திற்கும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தமது நன்றியினைத் தெரிவிப்பதாக பிரதேச மக்கள்தெரிவித்தனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த அதாஉல்லா செய்யாததை தவம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்தனர்.
எமது நிலங்களை பாதுகாக்க போராடும் தவத்திற்கு எமது நிலங்களை பாதுகாக்கும் பிரச்சாரம் சார்பாக நன்றிகள்