மற்றயவர்களின் அமானிதங்களை சூறையாடுதலை கடுமையாக கண்டித்துள்ள இஸ்லாம் திருடுதலுக்கு கையை வெட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது காரணம் இன்னொருவரின் பொருளை திருடுவது மிகப்பெரிய பாவமாகும். திருட்டில் பெரியது சிறியது என்றில்லை அனைத்தும் ஒன்றே.
இலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்களிலும் வீதியோரங்களிலும் செருப்புக்களும் ஹெல்மட் தலைக்கவசங்களும் அதிகளவாக திருடப்படுகின்றன.
செருப்புக்கள் 500 ரூபாய் முதல் 2000 வரை பெறுமதியுள்ளவை ஹெல்மட்டுக்கள் 2000 முதல் 5000 வரை பெறுமதியுள்ளவை இதனை வேண்டுமென்றும் இன்னும் சிலர் தங்கள் பொருட்கள் திருடப்பட்டது அதனாலும் திருடுகின்றனர். இன்னும் ஒரு கூட்டம் இதனை ஒரு தொழிலாக கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு பொருட்களும் வீதிகளில் செல்ல அவசியமாக பொருட்கள் பள்ளிவாசலுக்கு சென்று செருப்பில்லாமல் 3 தொடக்கம் 4 கிலோ மீற்றர் நடந்து செல்வது மிகவும் கடினான காரியம். அது மாத்திரமின்றி ஜூம்ஆ தினத்தில் திருட்டுப்போனால் வாங்குவதும் கஷ்டம்.
இதுபோல ஹெல்மட் திருட்டுப்போனால் அதனை வாங்குவது சிக்கல காரணம் அது பெறுமதியான ஒன்று. திடீரென வாங்குவது கடினம் அதுபோல சட்ட சிக்கலும் கூட, போலிசில் பிடிபட்டால் தண்டப்பணம் அதுவேறு. இப்படி சிறியது என்று செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் சகோதரர்கள் பெறும் அவதி மிகப்பெரியது.
தயவு செய்து இப்படியான சின்னத்தனமான செயல்களிலிருந்து விடுபடுங்கள். அல்லது விழிப்புணர்வு செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான்.