எம்.எச். முஸ்தாக் முஹம்மட்
மரணத்தில் முளைத்த தலைவர்களின் தண்டவாளங்கள் வண்டவாளங்களில் ஏறி நின்று கூவுகிறது. மரணத்தில் மறைந்து மறைக்கபட்ட மர்மங்கள் பலவும் விலாவாரியாக மக்களுக்குள் இன்று பேசப்படுகிறது.
ஓர் தலைவனின் மரணம் ஏற்ப்படுத்திய வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டவர்கள். தலைவர் அஸ்ரஃப்பின் குடும்பத்தையும் சந்திக்கு எடுத்து அவரின் மனைவியை ஏமாற்றி தேசிய ஜக்கிய முண்ணனிக்கும் சாவு மணி அடித்து அரசியல் நடாத்தி கூடிக்குலாவி பங்குகளையும் அரசியல் அதிகாரத்தையும் பிரித்தெடுத்து சமூகத்தை அடைமானம் வைத்து எத்தனை நாட்களுக்குத்தான் இவர்கள் காலம் கடத்துவது அதனால்தான் இவர்களின் முகத்திரைகளை அவர்களே கிழிக்கின்றார்கள்.
ஹசனலியும் – அதிகாரமும் எனும் உட்க்கட்சி போராட்டமும் முடிவதற்கு முன்னரே தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் தலைப்பில் ஆதாரத்துடன் சிலரின் கபளீகர நாடகம் மக்கள் மனக்கண் முன்னே தாறுஸ்ஸலாம் மீட்பு முண்ணனியால் கொண்டுவரப்பட்டுள்ளது. அது போதாதா? எனக் கேட்டு 29.01.2017 அதிர்வில் அதிர்ந்தது கைமாறிய பல கோடிகள்.
தாறுஸ்ஸலாம் என்பது தனவந்தர்களின் ஒத்துழைப்புக்களுடனும் இலங்கை துறைமுக அதிகார சபையின் உழியர்களின் சம்பளத்தில் மாத மாதம் வெட்டி எடுத்த பணத்திலும் கட்டி முடிக்கப்பட்ட 07 மாடிக்கட்டிடம் இன்று தனிநபர்களின் சொத்தாக இன்று சித்தரிக்கப்படுகின்றது.
தலைவரின் நம்பிக்கைக்குரியவர்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டுக்கொண்டே இருந்தது இது தலைவர் அஸ்ரஃப் அவர்களோடு நெருங்கியவர்கள் நன்கறிவர். ஆகவே தலைவரின் கடைசிக்காலகட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட தாறுஸ்ஸலாத்துக்கு அடுத்த காணியை தலைவர் தவிசாளர் பொதுச்செயலாளர் தேசிய அமைப்பாளர் பொருளாளர் போன்றோருக்கு எழுதினார் என்றால் அது எதனைச் சொல்கின்றார் கட்சியின் உயர்பீடத்தை தலைவர் அவரால் உருவாக்கப்பட்ட கம்பனிகளை விட நம்பிக்கை கொள்கின்றார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்.
இப்போது தாறுஸ்ஸலாம் அருகில் உள்ள காணி மீண்டும் கட்சியின் பெயரில் தற்க்காலத்தில் உள்ளது என்றால் அதில் ஹசனலியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் உறுதி எங்கே உள்ளது? யாருக்கு தெரியும் இந்த 05 பேருக்குமாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
கட்சிசொத்து தலைவர் அஸ்ரஃப்பின் மரணத்தின் பின்னர் நடந்த குளறுபடிகளும் தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கையீனங்களும் பதவிப்பித்தலாட்டங்களுமே கட்சியை இவ்வளவு அடிமட்டத்திற்கு கொண்டுவந்தது என்பதில் தலைவர் ஹக்கீம் மாத்திரம் பொறுப்பல்ல கட்சியின் உயர்மட்டமும் பொறுப்புக்கூற வேண்டும்.
தலைவர் அஸ்ரஃப் மரணச்சுவாசத்தை நினைத்திருந்தால் அவரது செயற்ப்பாடுகள் அனைத்தும் வெளிப்பட்டிருக்கும் அவை நடக்காத துயரத்தை மக்கள் கடந்த 16 வருடமாக சுவாசிக்கிறார்கள் ஆனால் சிலர் மரணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை
2000ம் ஆண்டு செப்டம்பர் 16ல் நடந்த சம்பத்தைப் போல இன்னுமொரு முறை முஸ்லிம் காங்கிரஸீக்கு நடந்தால் என்ன நடக்கும் செயலாளர் நாயகம் எனக்கு எதுவும் தெரியாது என்பாரா? தவிசாளர் கேள்விகளைக்கொண்டு உயர்பீடத்திற்கு கடிதம் வரைவாரா? பொருளாளர் தான் தேசியப்பட்டியல் எம்.பியாக இருந்தமையால் கணக்கு எழுத வில்லை என்பாரா? என்ன நடக்கிறது?
வருடத்திற்கு வருடம் தலைவரின் விசுவாசத்தை பெற்றுக்கொள்வதற்க்காகவும் அவரின் கரிசனையில் பதவிகளை சுவாசித்துக்கொள்வதற்க்காகவும் தலைவருக்கு ஏற்றாற் போல் முஸ்லிம் காங்கிரஸ் யாப்புக்களில் மாற்றங்களை செய்து கொடுத்துவிட்டு எழும்புத்துண்டுகளுக்காய் ஏங்கி கசங்கி வங்குரோத்து அரசியல் நடாத்தும் நாடகக்காரர்களாக மாறி உயர்பீடக் கூட்டங்களில் இவர்கள் எல்லோரும் மௌனம் காத்ததும் தலைவருக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அறிக்கைகளை விட்டு அரசியல் நாடகம் ஆடியது எதற்க்காக? கட்சியை மூலதனமாக்கி தலைவர்கள் செய்த வர்த்தகத்தில் நாங்களும் பங்காளர்கள் என உரக்கச்சொன்னார்களா? என் என்னத் தோன்றவில்லையா? முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் எல்லோரும் பங்குதாரர்கள் அவர்கள்மக்கள் மத்தியில் பிரயாச்சித்தம் தேடியே ஆக வேண்டும்.
முஸ்லிம் சமூக தலைவன் கட்டித்தந்த தாறுஸ்ஸலாம் (சாந்தி இல்லம்) சமூக சொத்தை எவரும் கையாடிவிடக்கூடாது என்பதில் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் விளிப்பாக இருக்கிறார்கள். அது மாத்திரமல்ல தலைவர் அஸ்ரஃப்பின் தனிப்பட்ட சொத்தும் லோட்டஸ் நிறுவனம் யுனிட்டி பில்ட்டர்ஸ் போன்ற தனியார் கம்பனி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவர் வாழ்ந்த ஹிறா என அழைக்கப்படும் கல்முனை அம்மன்கோவிலடி வீடு தலைவரால் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மர்ஹீம் நுாஹீலெவ்வையிடம் கொள்வனவு செய்யப்பட்ட 1ஏக்கர் 1ரூட் 18 பேச்சர்ஸ் ஒலுவில் காணியும் அதில் கட்டப்பட்ட வீடும். ஓலுவில் ஆலிமடுக்கண்டம் – கலை வயல் வயற்க்காணி 04 ஏக்கர் மல்லிகைத்தீவு சம்பு மடு குளலன் வெளிக்காடு – வயற்க்காணி 07 ஏக்கர் 03 ரூட் 21 பேச்சரஸ் வயல்க்காணிகள் மற்றும் ஆறு பிரபல கம்பனிகளில் உள்ள 8000ற்கு மேற்ப்பட்ட பங்குகள் என்பன தலைவரின் மரணத்தின் பின்னர் தலைவரின் வாரிசான அமானுக்கு சென்றடைய வேண்டியது அதனையும் முஸ்லிம் அரசியல் சொத்தாக நாம் எப்படி கருதிவிட முடியும்.
இப்புத்தகம் வெளிவந்ததில் இருந்து கிழக்குத்தலைமையின் மறைவின் பின்னர் தெற்குக்கு மாறிய தலைமைத்துவம் இனி ஒரு போதும் மீண்டும் தெற்கில் வசிக்காது எதிர்காலம் கிழக்குத்தலைமை நோக்கி நகரும் அது யார்? எப்படியானவர் என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க நல்ல சந்தர்ப்பம் இப்புத்தகம்.
தலைவர் அஸ்ரஃப்பின் மேற்க்கூறப்பட்ட தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அமான் அஸ்ரஃப்பிற்கு மக்கள்மன்றில் பிரதான மேடையில் பள்ளிவாசல் சிவில் சமூகத்தலைமை அரசியல்கட்சி தலைமைகள் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் தாறுஸ்ஸலாம் அமைந்துள்ள பழைய காணிக்கட்டிடமும் புதிய 07 மாடிக்கட்டிட காணியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தவிசாளர் பொதுச்செயலாளர் தேசிய அமைப்பாளர் பொருளாளர் போன்றோருக்கு எழுதிக் கொடுக்கப்பட வேண்டும்.
பின்னர் கட்சி சொத்துக்களை நம்பிக்கை நிதியத்தின் ஊடாகவோ கட்சியினாலோ தொடர்ந்தும் பராமரித்துக் கொள்ளும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட வேண்டும் அது மாத்திரமல்லாது கட்சி பதவிவழிகளும் உரிய முறையில் உரியவர்களைக்கொண்டு நிரப்பப்படவேண்டும் கட்சியின் உயர்பீடக்கூட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாய் இடுப்பும் முள்ளந்தண்டும் உள்ள முஸ்லிம் அரசியல் செயற்ப்பாட்டாளர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.