Top News

பட்டதாரிகளை தொடர்ந்தும் ஏமாற்றும் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள்




தமிழ் மொழிமூல பட்டதாரிகளாக அதிகம் தகைமை பெற்றுள்ள முஸ்லிம் மாணவர்கள் கிழக்கு, தென் கிழக்கு பல்கலை கழக வளாகங்களில் கல்வி பயின்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 95 வீதமான பட்டதாரிகள் மொழியறிவில் தேர்ச்சியற்றவர்களாக காணப்படுகின்றனர். சிங்களம் ஆங்கிலம் ஆகியவற்றில் மந்த நிலை இதே போல பொது அறிவு, நுண்ணறிவு போன்றவற்றிலும் மந்த நிலை இதற்கான காரணம் அவர்கள் படிக்கும் போது இந்த விடயங்களில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதற்காக வளவாளர்கள் அவர்களை தயார் படுத்துவதில்லை. வர்த்தக கலைப்பிரிவில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வாரு பல்கலைக்கழகங்களிலும் இருந்து தலா 300 பட்டதாரிகள் வெளியாகி கொண்டே இருக்கின்றனர். இவர்களில் 5 வீதமானவர்களுக்கே தொழில்வாய்ப்பு கிட்டுகிறது அதுவும் அவர்களின் பட்டங்கள் சாரா துறைகளிலே அவர்கள் பணிபுரிகின்றனர். ஒரு சிலருக்கு 5 வருடங்களுக்கு பிறகே துறை சார்ந்த ரீதியில் தொழில் வாய்ப்பை அரசு வழங்குகிறது இதுவும் மலையில் மாடேற்றும் சீலம்.

வர்த்தக மற்றும் கலைப்பிரிவு பட்டதாரிகளே அதிகம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் காரணம் குறித்த பட்டப்படிப்புகளுக்கு ஆசிரியர், மகாமைத்துவ உதவியாளர், அலுவலக இலிகிதர்கள் போன் பதவிகளே அரசால் வழங்கப்படுகிறது. இதற்கும் போட்டிப்பரீட்வை, நேர்மக தேர்வு என்று பல சிக்கல். எப்படி பார்க்கிலும் 95 வீதமான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான்.

அண்மையில் கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கு ஒரு போட்டிப்பரீட்சை நடைபெற்றது இது ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்குதான், இதில் 2 வீதமான முஸ்லிம் பட்டதாரிகளே அம்பாறை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படியான பரீட்சைகளை வேண்டுமென்ற நடத்துகிறார்களா? அல்லது மத்திய அரசின் விதிமுறையா என்று புரியவில்லை. சித்தியடையாத பட்டதாரிகள் ஒன்றும் தகுதியற்றவர்கள் அல்ல அப்படியாயின் இந்த திட்டம் எதற்காக, கல்வியற்கல்லுாரிகளில் படித்து முடித்தவுடன் தொழலை வழங்கும் அரசுக்கு ஏன் பல்கலை முடித்தவுடன் தொழல் வழங்க மந்தம்? ஆயிரம் கேள்விகளை மனதிற்குள் சுமக்கும் வேலையற்ற பட்டதாரிகள் நிலை குறித்து சிந்திக்க நாம் கடமை பட்டுள்ளோம்.

IMAGE SOURCE : http://www.seu.ac.lk/events/images/idas_fia/5.jpg
Previous Post Next Post