இக்பால் அலி
மறைந்த மர்ஹும் எம். எச் முஹமட் அவர்கள் அரசியலில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட ஒரு நல்ல மனிதர். அவருடைய காலத்தில் பிரமிக்கத் தக்க அருமையான பணிகளைச் செய்து இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். எமது நாட்டினுடைய இன ஒருமைப்பாட்டுக்கு ஒரு உதாரண புருஷராகத்திகழ்ந்தவர். இலங்கை அரசியிலும்; ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சியிலும் அவருடைய பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாகச் சொல்லப் போனால் வன்முறை அரசியலை அங்கீகரிக்காத தலைவர் என்றே கூற வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மர்ஹும் மறைந்த அமைச்சர் எம். எச். முஹமட் அனுதாபப் பிரேரணையின் போது முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு அதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
முஸ்லிம்களுடைய சமூக நலன் தொடர்பான விரிந்த பார்வையும் சமூக நோக்கும் கலந்த அவரது பணி உடலிலோடும் குருதி முழுவதும் படர்ந்து பரவியிருக்கிறது. அதனால் தான் இஸ்லாமிய உலக நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டு மாளிகாவத்தையில் இஸ்லாமிய நிலையத்தை இஸ்தாபித்து அவர் ஆற்றிய பணி நிரந்தரமானது. இது இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.
சவூதி ஆரேபிய்யாவைத் தலைமையகமாகக் கொண்ட உலக ராபிததுல் ஆலமுல் இஸ்லாமியா அமைப்பை உருவாக்கிய ஆரம்ப கர்த்தாகளில் அவரும் ஒருவர். இங்கு எமது மாளிகாவத்தையில் இஸ்லாமிய நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் அவர் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆற்றிய பணியினை மறந்து விட முடியாது.
எல்லாவற்றும் மேலாக முதன் முதலாக முஸ்லிம்களுடைய புனித தர்ஜுமதுல் குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்தவர் இந்தியாவைச் சேர்ந்த அப்துல் ஹமீத் பாக்கவி ரஹ்மத்துல்லா அவர்கள். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இருந்தாலும் அங்கு அதனை அச்சிட்டு வெளியிடுவதற்கு வசதி இருக்கவில்லை. எம். எச். முஹம்மட் இளைஞனாக இருக்கும் பருவத்தில் அவர் இலங்கை வந்த போது எம்.எச். அவர்களுடைய இல்லத்திற்கு அவர் வந்திருந்தார். இதற்கான முழு நிதி உதவியையும் வழங்கியவர் எம். எச். அவர்களுடைய தந்தை என்பது யாருக்கும் தெரியாது.
எம். எச். முஹம்மத் அவர்கள் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் மக்களினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக உழைத்தவராவார், 1921 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தெமட்டகொடையில் பிறந்தவர். கொழும்பு உவெசிலிக் கல்லூரியில் கல்வி கற்றராவர். அன்றைய வழக்கறிஞராகவும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக விளங்கிய முஹம்மு ஹனிபாவுக்கு மகனாகப் பிறந்த இவர் மாளிகாவத்தையில் அரசியல் பணிகளைத் தொடங்கினார். இவர் இளம் பராயத்தில் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட போதிலும் சொற்ப காலத்தில் ஐக்கிய தேசிய கட்சயின்p ஊடாக முழுநேர அரசியலில் பிரவேசித்தார்.
தம் தந்தையின் வழியைப் பின்பற்றி 1949 ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக முதன் முதலாக அரசியலில் பிரவேசித்தவர். 1960-1962 காலப் பகுதியில் மாநகர முதல்வராக இருந்தார். கொழும்பு மாநகர சபையின் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார், 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பொரளைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு இடதுசாரிக் கோட்டையாக விளங்கிய இடத்தைக் கைப்பற்றினார். இதன் காரணமாக டட்லி சேனாநாயக காலத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகி அரசாங்கத்தில் தொழில் மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
.
முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனாவின் காலத்தில் போக்குவரத்து அமைச்சர். முன்னாள் ஜனாதிபதி ஆர், பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சபாநாகராக இருந்தார். 2001-2004 ஆம் ஆண்டின் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர். 2007-2010 ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவிவகித்தார்.
இலங்கை அரசியல் போக்கு காட்டும் தன்மை எற்ப அவருடைய அரசியல் முன்னெடுப்புக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது வீரியமிக்க பணிகள் பிரதிபலிப்பாகவே இருந்து வந்துள்ளது. அதேபோன்று ஒவ்வொரு கால கட்டத்தோடும் எதிர் நீச்சல் போட்டு தன் தோள்களில் நாட்டுக்காவும் மக்களுக்காகவும் தம் சமூகத்தின் நலன்களுக்காகவும் பாரங்களை சுமந்து கொண்டு அமைதியான முறையில் கரையேறியவர் . தொழில் அமைச்சராக இருக்கும் போது தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைத்துள்ளார். இத்தகைய சரித்திர சாதனையாளர் ஒரு நாளும் மண் மூடி மறைந்து போகமாட்டார்கள். காலம் பூராவும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். இத்தகைய ஆற்றல் வாய்ந்த மறைந்த அமைச்சர் எம். எச். முஹம்மத் அவர்களை நினைவு கூர்ந்து பேசுவது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
கொழும்பு உவெசிலிக் கல்லூரியில் கல்வி கற்றராவர். வாழ்க்கைத் துணைவியராக நூர் நசிமாவை கைப்பிடித்துக் கொண்டவர். உஸைன் முஹமட் செல்வப் புதல்வர்களைக் கண்டவர். இவர் தந்தை போன்று அரசியலில் நாட்டம் இருந்தாலும் சிறு காலத்திற்குப் பின் அரசியிலிருந்து ஒதுங்கி விட்டார்.
. அக்காலத்தில் ஆற்றிய சேவைகளைப் பற்றி இன்று நாங்கள் சிலாகித்துப் பேசக் கூடவையாக உள்ளன.1979-1980 களில் உலகப் பொது மறையான அல்குர்ஆன் அருளப்பட்டு வருட நிறைவை முன்னிட்டு 1400 ஆண்டு ஒரு தேசிய விழாவாக் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டதை இன்னும் நினைத்துப் பார்க்க முடிகின்றது, அத்தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் விசேட முத்திரையொன்றையும் வெளியிட்டது. அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவுடன் கலந்துரையாடி முஸ்லிம்களுக்கென தனியானதொ முஸ்லிம் சமயம் பாண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை உருவாக்கிய வரலாற்றுப் பெருமை அவருக்கே உள்ளன.
இங்கு எம்.. எச். முஹம்மத் அவர்கள் அவரை நோக்குவது இஸ்லாமிய பரிணாமத்துடன் தான் நோக்க வேண்டியிருக்கிறது. டி. பி. ஜயா, எம். சீ. கலீல், செர் ராசீக் பரீத், கலாநிதி பதியுத்தீன் முஹம்மட், என்னுடைய மாமா ஏ. சீ. எஸ். ஹமீட் இந்தப் பின்னணியில் அவரிடமும் சமூக ஆளுமை, இலக்கு, அடையாளம் பொதுவாகக் காணக் கூடியதாக இருந்தன.
என்னுடைய மாமாவான அமைச்சர் ஹமீதுடன் அந்நியோன்னியமான உறவு இருவருக்குமிடையே இருந்தது. அப்போது நான் இளம் பராயத்தில் என்னுடைய மாமாவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றும் போது சிற் சில சந்தர்ப்பங்களின் போது தான் நான் அவருடன் பழகக் கூடிய வாய்ப்புகள் இருந்தன.
வரலாறு படைத்த பொரளைத் தேர்தல் தொகுதி இன நல்லிணக்கத்திற்கு அடையாளமாக காட்டி அவர் வழிநடத்திய, அவர் முன்னெடுத்த முயற்சிகள் விதந்து பாராட்டக் கூடியதாக இருக்கிறது. அந்த ஒத்த தன்மை கண்டி மாவட்டத்தில் என்னுடைய ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கு உண்டு. சமீபா காலத்தில் நாட்டில் சிங்கள் முஸ்லிம் இன முரண்பாடுகள் இருந்தாலும் இன ஒருமைப்பாட்டுக்குரிய மையமாக என்னுடைய ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி இன்னும் விளங்குகின்றது. பல விடயங்களில் ஒருமித்த கருத்தை உடையவர். இந்த ஒத்த நல்ல தன்மை எங்களிடையே பிரதிபலிக்கின்றது. நான் இதனை நான் விதந்து பாராட்டுவதுடன் அவற்றைக் கோடிட்டுக் காட்டவும் விரும்புகின்றேன்.
இளம் வயதில் இருந்தே அரசியில் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்ட எம். எச் முஹமட் மறைந்த மா பெரும் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் வெளிநாட்டு உலக இஸ்லாமிய வெளிநாட்டுப் பிரமுகர்களுடனும் மிக் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
அவரது அமைதியான போக்கு, பிறர் நலன் பேணுவதில் அதீத அக்கறை, மனித நேயத்துக்கு உரித்தான அலாதியான குணாம்சங்களைக் கொண்ட ஒரு நல்ல மனிதர். இவர் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களின் ஊடாக நீண்ட கால அரசியல் வாழ்வில் பல சாதனைகளைப் புரிந்தவர். இவை முஸ்லிம்களை மட்டும் கருத்திற் கொண்டவையல்ல. நாட்டினுடைய அனைத்து இன மக்களையும் சென்றடைந்துள்ளன.
ஆரவாரமின்றி நாட்டுக்கும் மக்களுக்கும் பணிசெய்து காத்திரமான பங்களிப்பைச் செய்த மர்ஹும் எம். எச். முஹம்மத் அவர்களுக்கு நினைவு கூறப்படுவது வரவேற்கத்தக்க அம்சமாகும். அருடைய இழப்பு எம்மைப் பொறுத்த வரையில் ஈடு செய்ய முடியாதொன்று ஆகும். அவர் போன்று நாம் எல்லோரும் நேர்த்திமிக்க வன்முறையற்ற அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்வோம்