Top News

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் நாடு திரும்ப அழைப்பு



அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ட்ரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து வெளிநாடுகளில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களை நாடுதிரும்புமாறு கூகுள் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வருவதற்குள், வெளிநாடுகளில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post