கடந்த ஓரிரு வாரங்களாக கிழக்குமாகாணத்தின் பெரும்வாரியான பிரதேசங்களில் பனிபெய்து கொண்டிருக்கிறது என்றுமில்லாதவாறு இந்த வருடம் காலையில் பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பெரிதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்தர் சி.கிளாக் சொல்லியது போல கிழக்கு மாகாணம் நுவரெலியா போன்று 2020 ல் மாறும் என்ற கூற்று உண்மையாகிறதாஅப்படி மாறுவது ஆபத்தாக இருக்கலாம் என காலநிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர், அது மாத்திரமின்றி அப்படி மாறினால் மக்களின் இயல்பு வாழ்க்கையம் பாதிக்கப்படும். நோய்கள் வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
சழி, தடிமன், இருமல், களிர் மூச்சு போன்ற நோய்கள் வரும் வயது போனவர்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் இப்போது பாதிக்கப்பட்டிருப்பது போல.
இப்படி மாற்றம் ஏற்படும் என அறிந்தால் அதற்கான தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும். அது குறித்து அறிந்தும் வைத்திருக்க வேண்டும்.
கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சத்து நிறைந்த உணவுகளை உண்ணுமாறும், முடிந்தளவு விட்டமீன்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறும், பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.