லியாக்கத் அலி BA |
கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம பகுதிகளில் உள்ள ஸகாத் நிதியங்கள் சரியாக இயங்கினால் வறுமையை ஒழிக்க முடியும், அதுமாத்திரமின்றி ஸகாத் நிதியங்களின் பொடுபோக்கினால் ஸகாத் வழங்குபவர்களின் பட்டியலும் குறைந்துள்ளதாக அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத் அலி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றை பொறுத்தவரை 25000 நெல்மூட்டைகள் சராசரியாக ஸகாத் நிதியத்திற்கு வந்து சேரவேண்டும் ( இன்றைய விலை ஒரு மூட்டை 3500 அப்படியெனில் 25000X3500 = 875 00 000 அண்ணளவாக) எத்னை ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்க முடியும், எத்தைன சிறு வியாபாரங்களுக்கு உதவ முடியும். ஏன் இந்த பொடுபோக்கு தனம், இதற்காக இருவரை முழுநேரமாக பணிக்கு அமர்த்த முடியும் ஏன் செய்யவில்லை.
நெல் தவிர ஏனைய வியாபாரங்கள் மூலம் பெறப்படும் சகாத் இவற்றையெல்லாம் சேர்தால் பாரிய விடயங்களை செய்ய முடியும். இந்த மந்த நிலையை போக்க நாங்கள் உதவ தயாராக உள்ளோம் அது மாத்திரமின்றி கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் இவ்வாறு சரிவர ஸகாத் கொடுக்கப்பட்டால் வறுமை என்ற கதைக்கே இடமில்லை என்றார்.