"இஸ்லாத்தில் பயங்கரவாதம் இல்லை. முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்"
எனும் கருப்பொருளில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் முத்தாய்ப்பு நிகழ்வாக நேற்று (28/01/2017) அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டக் கிளைகள் இணைந்து நடாத்திய மாபெரும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்மாந்துறை அல்மர்ஜான் பெண்கள் கல்லூரி வளாகத்தில் அல்லாஹ்வின் பேரருளால் இனிதே முடிவுற்றது.
இம்மாநாட்டில் கீழ்காணும் தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
1)இஸ்லாம் கூறும் மனித நேயம் - சில்மி ரஷீதி (துணை செயலாளர் SLTJ)
2)இஸ்லாமய சாமயேதஹமய்(இஸ்லாம் அமைதியின் மார்க்கம் )தவ்ஸீப் - பேச்சாளர் SLTJ
3)Islam is the solution for global peace(இஸ்லாம் ஒன்றே உலக சமாதானத்திற்கான தீர்வு) - அப்துல் ஜப்பார் BA
4)இலங்கை சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு -F.M.ரஸ்மின் MISc(துணை ஆசிரியர் - அழைப்பு மாத இதழ்)
5)தீவிரவாதத்தை வேரறுக்கும் இஸ்லாம் - M.T.M. பர்ஸான் (தலைவர் SLTJ)
புனித இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கமல்ல! அது மனித நேயத்தை ஆசிக்கும் அமைதி மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்லர்! இந்த தேசத்தின் நலன்களுக்காய் உயிர்தியாகம் செய்தவர்கள் எனும் கருத்து இம்மாநாட்டு மேடையில் ஓங்கி எதிரொலித்ததுடன், தவறிழைப்பவர்களை மதத்துடன் இணைத்து தீவிரவாத முத்திரை குத்த முயலும் ஊடகங்களின் ஒருதலைப்பட்ச போக்கு கடுமையாக கண்டிக்கப்பட்டதுடன், பல்லின சமுதாய சூழலில் நல்லிணக்கம் கட்டிக்காக்கப்படல் வேண்டும் என்ற செய்தியும் முத்தாய்ப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட மாநாடாக அறிவிக்கப்பட்ட போதிலும் மைதானமே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக் கணக்காண மக்கள் குடும்பம் சகிதம் சங்கமித்து "முஸ்லிம்களாகிய நாம் தீவிரவாதத்தின் எதிரிகள்" என்பதை நிரூபித்தமை பெரும்பான்மை மக்களிடம் நிலவும் கசப்புணர்வினை நிச்சயம் மாற்றும் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.