இன்று அதிகமான முஸ்லிம் பெண்கள் போலியான முகப்புத்தக கணக்குகள் வைத்தக் கொண்டு profile pic ஆக சினிமா நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை பதிவேற்றியிருப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சினிமா மீதான அளப்பரிய அன்பு இன்று முஸ்லிம்களிடத்தில ஊறிவி்ட்டது. தொலைக்காட்சி நாடகம் முதல் கூத்துப்பாடல்கள் வரை வீட்டு தொலைக்காட்சியிலும் கையிலிருக்கும் மொபைல் மற்றும் டெப்களிலும் பார்க்கப்படுகிறது. நடிகைகள் போன்று உடையணியவும் ஆசைப்படுகின்றனர் புதிய புதிய ஆடைகளுக்கு சினிமாப் படங்களின் பெயர்களை வைத்துள்ளனர்.
இவைகளை பார்க்க யாரும் இல்லாத அல்லது அது பாவம் என்று அச்சுறுத்தாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவற்றைவிட சினிமா திரையரங்குகளுக்கு ஹபாயா அணிந்து கூட்டமாக படம் பார்க்க செல்கின்றனர். குறிப்பாக கிழக்குமாகாணத்தில் உள்ள செங்கலடி திரையரங்கு, கல்முனை திரையரங்கு, அக்கரைப்பற்று திரையரங்கு ஆகிய திரையரங்குகளுக்கு இப்படி செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். இது குறித்து நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்தாலும் நமது சமூத்தின் பிழைகளை நாமே வெளிக்கொணர கூடாது என்று இருந்தோம் ஆனால் இன்று அதை மீறி சென்று விட்டது.
பாதுகாவலர்களாக இருக்கும் கணவன்மார்கள், தந்தைமார்கள் தயவு செய்து கவனத்தில் எடுங்கள். நாங்கள் அதிகமதிகம் பாவம் செய்வதாலேயே நாம் சோதனை செய்யப்படுகிறோம். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.