Top News

இஸ்லாம் அனுமதித்துள்ள ஜல்லிக்கட்டை பாதுகாக்க ஒன்றிணைவோம் #SaveJallikatu



நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களுடைய காலத்தில் ஒட்டக பந்தயம் வைத்து சிறந்த ஒட்டகத்தை தேர்வு செய்துள்ளார்கள். அம்பு விளையாட்டு, மல்யூத்தம் போன்ற வீர விளையாட்டுகளை விளையாட அனுமதித்துள்ளார்கள்.
.
அதுவும் அதற்காக இரண்டு நாள்கள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் நாட்களை ஒதுக்கியுள்ளார்கள். 
.
ஒட்டக பந்தயம்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. பைலா (அழ்பா) தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அது அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை. அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும்" என்று கூறினார்கள். நூல் புகாரி
.
குதிரை பந்தயம்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே 'ஹஃப்யா' எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை 'சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.
நூல் :புகாரி
.
அம்பெறியும் விளையாட்டு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை. அவர் மாறு செய்துவிட்டார். நூல் - முஸ்லிம்
.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
.
இது போல் தமிழர்களின் விளையாட்டு ஜல்லிகட்டு. இது நம் இனத்தின் விளையாட்டு. தமிழர்களின் கலாச்சார விளையாட்டை பாதுகாப்போம்.
Previous Post Next Post