தொழில்வாய்பற்று இருக்கும் பட்டதாரிகள், உயர் டிப்ளோமாதாரிகள், உயர்தரம் படித்த சிறந்த பெறுபேறுள்ளவர்கள், உயர்தரத்தில் மயிரழையில் பல்கலை செல்லாதவர்கள், தொழில் நுட்ப கல்லுாரியில் சான்றிதழ் முடித்தவர்கள, பாடசாலைக் கல்வியை தொடர முடியாத சாதாரண தரம் சித்தி பெற்றவர்கள் அதிகம் செறிந்து வாழும் இந்த காலத்தில் இவர்களை துருப்புகளாக வைத்து பணம் பறிக்கும் அரசியல் சாக்கடை முதலைகள் உருவாகியுள்ளனர்.
ஜனாதிபதி இணைப்பாளர்கள், பிரதமரின் இணைப்பாளர்கள், அமைச்சர்களின் இணைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், முதலமைச்சரின் இணைப்பாளர்கள், ஆளும் கட்சிகளின் அமைப்பாளர்கள் என தங்களை தாங்களாக அறிமுகம் செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து அதன் மூலம் இளைஞர்களின் மனதை மயக்கி அவர்களிடம் தொழில் பெற்று தருகிறோம் என பணம் வசூலிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் வரை அறிவிடப்படும் அல்லது பறிக்கப்படும் பணங்களை கொடுத்தவர்களுக்கு ஆதாரம் இன்றி தொழிலுமின்றி அலைந்து திரியும் எத்தனை காட்சிகளை நாம் கண்டிருப்போம்
நல்லாட்சி அரசிலும் இது தொடர்வது வேதனைக்குரியது. இதனை தடுக்க முற்பட்டாலும் இறுதியில் முடிவதில்லை. காரணம் ஒரு அரச உயர அதிகாரிகளுக்கும் இதில் பங்குள்ளதாம். காசு கொடுத்து தொழில் பெறலாம் என்பது சர்வ சாதாரணமாக இருக்கும் இந்த நிலையில் வறுமையில் தகைமை இருந்தும் வேலையிழந்து நிற்கும் இளைஞர் யுவதிகளை நினைக்ககிற பொழுது நெஞ்சம் அழுகிறது. இதில் என்ன கேவலம் என்றால் இதனை அதிகம் முஸ்லிம்களே செய்கின்றனர். அண்மைய தரவுளின் படி கிழக்கின் முஸ்லிம் பகுதிகளிலேதான் இது மேலோங்கியுள்ளதாம்.