நாட்டில் சுமார் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்து ள்ளார்.
மொரட்டுவ வேல்ஸ்குமார கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இத னைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் சுமார் அறுபதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகின்றது. எனினும் நாட்டில் சுமார் நாற்பதாயிரம் ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர்.
ஆசிரிய இடமாற்றங்கள் பாடசாலைகளுக்கு உரிய முறையில் நியமிக்கப்படாமையினால் இவ்வாறு நாற்பதாயிரம் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக சில பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.
பாடசாலை கட்டமைப்பில் அதிபர்களுக்கான பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் 3901 அதிபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதேவிதமாக இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.