அமெரிக்கா அண்மையில் 7 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவினை தடைசெய்துள்ள நிலையில் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் குவைட்டும் முஸ்லிம் நாடுகளை தடைசெய்வதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டின் இந்த தடைப்பட்டியலில் சிரியா,ஈராக்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடங்குவதாக குவைட் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அமைய சிரியாவையும் தடைசெய்யும் ஒரே நாடு குவைட் என்பதுடன், 2011ஆம் ஆண்டு குவைட் அனைத்து சிரியர்களினதும் வீசா தடைநீக்கத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளின் உறுப்பினர் நாடுகள் என்ற ரீதியில் ஈரான் மற்றும் குவைட்டிற்கு இடையிலான பிரிச்சினைகளுக்கு வாசிங்டனானது 1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.