அல்-ராஷித் ரவல்ஸ் & ருவர்ஸ் நிறுவனம் யாருக்கும் போட்டியாகவோ பொறாமைத் தனம் கொண்டோ உருவாக்கப்பட்டதல்ல என்று குறிப்பிட்டார் அல்றாசித் டிரவல்ஸ் உரிமையாளர் ஏ.பி.அன்சார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் சங்கம் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கு பதில்கூறும்போதே இதனை அவர் தெரிவித்தார். சிலோன் முஸ்லிம் இணையத்தளத்திடம் மேலும் கருத்துரைத்த அவர்,
எங்கள் சேவைகள் மூலம் மக்கள் சிறந்த பலனையடைய வேண்டும் என்பதுவே முழுமையான நோக்கம்.
ஆனால் இவர்கள் பலதடவைகள் எங்கள் பஸ்ஸின் மீது கற்களை வீசி பல இலட்சங்களை நஷ்டப்படுத்தினார்கள், நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள், இன்று ஊடகத்தைப் பாவித்து அல்-ராசித் ரவல்ஸ் ருவர்சுக்கு இலவச விளம்பரம் செய்து தந்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பஸ்கள் அனைத்தும் அரசாங்க போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் சரியான முறையுடனே பயனிக்கிறது. சகல பஸ்களுக்கும் வீதிப்போக்குவரத்து அனுமதியிருக்கிறது.
அதன் சகல ஆவனங்களையும் நீதிமன்றிலும் காட்டி நீதிகிடைத்து வெற்றி பெற்று தொடர்ந்து பயணிக்கும் நிலையில் இப்படியொரு வங்குறோத்து அறிவிப்பினை நினைத்து இவர்கள் மீது கவலையடைகிறேன்.
நான் இவர்களிடம் கேட்க விரும்புவது எனது பஸ்கள் அக்கரைப்பற்றிலும் சம்மாந்துறையிலும் இருந்து வரும் நிலையில் கல்முனையில் இருந்து செல்லும் உங்களுக்கு எவ்வாறு நஷ்டம் ஏற்படுகிறது என்பதனை விரிவாகக் கூறமுடியுமா?
எனது பஸ்ஸுக்காக கல்முனையில் ஆசனப்பதிவும் இல்லை என்றிருக்கும்போது அக்கரைப்பற்று சம்மாந்துறை பயணிகள் எனது பஸ்ஸில் பயணித்தால் உங்கள் பிரச்சனை என்ன.?
உங்களுக்கும் உணவு கொடுக்க அல்லாஹ் எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளான் ஏன் என்றால் என்னிடம் வஞ்சகத்தனமான வக்கிர புத்தியான தான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணமில்லை.
எனது பஸ்கள் ஓடும் பணத்தில் இன்று பலர் வாழ்கின்றனர். பலருக்கு உணவு கொடுக்கப்படுகின்றது. அதுதான் அல்லாஹ் எனக்கு வழங்கும் அருட்கொடை. எனவே போட்டி பொறாமைகளை தூக்கி உங்கள் பஸ்சின் டையறுக்குள் போட்டு அரைத்து வீசிவிட்டு ”லகும் தீனுக்கும் வலியதீன்” என்று பயணியுங்கள்.
உங்களுக்கு உங்கள் தொழில் எனக்கு எனது தொழில் உங்கள் தொழிலில் நான் குறுக்காக வரவில்லை.
அப்படி நான் தொழில் செய்வது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் எனது சகல பஸ்களையும் எடுத்துக்கொண்டு பணத்தைத் தாருங்கள் பின்னர் நீங்களே எல்லாத்தையும் செய்யுங்கள்.
ஒன்றை மட்டும் இறுதியாகச் சொல்கிறேன் நான் நானாகவே இருக்கிறேன். பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம் அதற்காகவே இன்னும் பல சொகுசு பஸ்களுக்கு ஓடரும் கொடுத்திருக்கிறேன். ஆகவே அரசன் அன்றே கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பதனை நினைத்து உங்கள் பொறாமைகளை மறந்து விடுகிறேன் நீங்களும் மறந்து தொழிலைச் செய்யுங்கள். என்றார்.