Top News

அதிக வேகம் வேண்டாம். அவரசமும் வேண்டாம்


ஜெம்ஸித் அஸீஸ்
நேற்றைய 24 மணி நேரத்திற்குள் நடந்த விபத்துகளில்
ஏழு பேர் பலி… 42 பேர் படுகாயம் என்கிறது செய்தி.
விலை மதிக்க முடியாதது மனித உயிர். அது புனிதமானதும் கூட.
அகோர விபத்துகளில் சிக்கி மரணிப்பதை எவரும் விரும்புவதில்லை.
அகால மரணம் மக்களை மீளாத் துயரில் மூழ்கடித்து விடும்.
எனவே, வாகனம் செலுத்துபவர்களுக்கு கவனம் தேவை.
சாரதிகள் நிதானமாக பயணிக்க வேண்டும்.
எத்தனை எத்தனை உயிர்கள் வீதிகளில் பிரிந்து விட்டன. அவற்றையெல்லாம் பார்த்தும் கேட்டும் சாரதிகள் கவனமெடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.
“ஒரு மனிதனை வாழ வைப்பது முழு மனித சமூகத்தையும் வாழ வைப்பதற்கு சமமானது…” என்று உயிரின் பெறுமதியை உரத்துச் சொல்கிறது இஸ்லாம்.
எனவே, அதிக வேகம் வேண்டாம். அவரசமும் வேண்டாம். அது ஷைத்தானின் பண்பு.
நிதானமாக பயணிப்பது நமது கடமை.
ஆபத்தை தேடிச் செல்வது நமது மடமை.
Previous Post Next Post