அபு றஷாத் - அக்கரைப்பற்று
அண்மைக்காலமாக மு.கா.தலைவருக்கும் தவிசாளருக்குமிடையேயான பணிப்போர் சூடுபிடித்யுவரும் சூழலில் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பஷீர் சேகுதாவூத் வருகின்ற 12 திகதி இடம்பெறவிருக்கின்ற பேராளர் மாநாட்டுக்கு முன்னர் 11 ம் திகதி சில மர்மங்களை அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாரங்களோடு இன்று தலைவரோடு ஒன்றினைந்து இருக்கின்ற கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் இருவருடைய முக்கியமான ரகசியங்களை பஷீர் ஆதாரத்தோடு வெளியிடுவார் என அரசியல் மட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அவற்றில் தொழில் விடயமாக தம்மை அனுகுகின்ற இளம் பெண்களுக்கு நிகழும் சம்பவங்களை அவர்களது வாக்குமூலத்தோடு வெளியிட இருப்பதாகவும் அவ்வாதாரங்கள் வெளியான பின்னர் குறிப்பாக சாய்ந்தமருது, ஒலுவில், சம்மாந்துறை போன்ற பிரதேசத்தை சேர்ந்த போராளிகள் குறித்த கிழக்கு அதிகாரங்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்பார்கள் எனவும் தெரிவிக்கப்படும் அதேவேளை பஷீரால் வெளியிடப்போகும் கிழக்கு மாகாண அதிகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் விடயங்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்று எவரும் கிழக்குக்கு செல்வதை தடுக்கும் எனவும் அவை பல முஸ்லீம் அவலைகளது கண்ணீர் குமுறல்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷீர் தற்போது மிக ரகசியமாக ஓரிருவடன் மாத்திரம் பகிர்ந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.