Top News

டிரம்பைப் போன்று முஸ்லிம் நாடுகளை பிரான்சும் தடை செய்யும்


ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவைப் போன்று பிரான்சும் தடைவிதிக்க எதிர்பார்த்துள்ளதாக ஸ்டீவ் பிரோவ்ஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மெரயின் லீ பென் என்பவரின் மிக நெருங்கிய ஒருவரான ஸ்டீவ் பிரொவ்ஸ் இவ்வாறு அறிவிப்புச் செய்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பென் வெற்றி பெற்றால், டிரம்பைப் போன்று முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக ஸ்டீவ் பிரொவ்ஸ் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் தீர்மானத்தை ஐரோப்பா முழுவதும் நடைமுறைப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லையெனவும் ஸ்டீவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post