Top News

தம்புள்ளை விவகாரம் தொடர்பில் உலமா சபை ஆலோசனை

தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் அமைதி காக்கும் படியும் அல்­லாஹ்­விடம் துஆ கேட்கும் படியும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.



தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இட­மொன்­றுக்கு இட­மாற்­றிக்­கொள்­வ­தற்­கான காணி ஒதுக்­கீட்டில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­நிலை மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு விடு­க்­கப்­பட்­டுள்ள சவால்கள் தொடர்­பாக நேற்­றுக்­காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி இவ்­வேண்­டு­கோளை விடுத்­துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டலில் கருத்து தெரி­விக்­கையில்;
 ‘தம்­புள்­ளையில் யார் ­யா­ரெல்லாம் ஒரு இலட்­ச­மல்ல, ஒரு­கோடி கையொப்­பங்கள் சேக­ரித்­தாலும் எம்மை ஒன்றும் செய்­து­விட முடி­யாது. முஸ்­லிம்கள் இந்­நாட்­ட­வர்கள். அவர்­க­ளுக்கு இங்கே சகல உரி­மை­களும் இருக்­கின்­றன. ஜம்­இய்­யதுல் உலமா சபை முஸ்­லிம்­களை இறை­வ­னிடம் கையேந்­து­மாறே கேட்­கி­றது.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். அவர்கள் நாட்டின் தலை­வ­ரிடம் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுத்­த­ருவர். நாம் அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது. நிதானம் இழக்கக் கூடாது. பிரச்­சி­னை­களை நிதா­ன­மாக இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுக வேண்டும். நிச்­சயம் எமது உரி­மைகள் பாது­காக்­கப்­படும்.

முஸ்­லிம்கள் எவ­ருக்கும் அநி­யாயம் செய்­ய­வில்லை. எமது பள்­ளி­வாசல் இருக்கும் இடத்தை விட்­டுக்­கொ­டுத்து அதற்கு மாற்­றீ­டாக போதி­ய­ளவு காணி­யையே வேண்டி நிற்­கின்­றார்கள். இது நியா­ய­மா­ன­தாகும் என்றார்.

கலந்­து­ரை­யா­டலில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம். கியாஸ் தலை­மையில் நிர்­வாக சபையின் பிர­தி­நி­தி­களும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உத­வி­செ­ய­லாளர் மௌலவி தாஸிம் உட்­பட மற்றும் பலர் கலந்து கொண்­டனர்.
கையெ­ழுத்து வேட்டை 
தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக பாரிய நகரம் மற்றும் மேற்கு பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க 20 ேபர்ச் காணி வழங்­கு­வ­தற்கு உறுதி வழங்­கி­யுள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை தம்­புள்ளை நகரில் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத்­திட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது.

தம்­புள்­ளையில் தொழுகை மண்­டபம் நிர்­மா­ணிப்­ப­தற்கு எதி­ராக ஒரு இலட்சம் கையொப்பம் சேக­ரிக்கும் வேலைத்­திட்டம் என நகரில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

தம்­புள்ள பொரு­ளா­தார மையம், கெக்­கி­ராவ பஸ்­நி­லையம், பொதுச்­சந்தை, கடி­கா­ரச்­சந்தி ஆகிய பகு­தி­களில் கையொப்­பங்கள் சேக­ரிக்­கப்­பட்­டன.
இறுதி எச்­சரிக்கை துண்­டுப்­பி­ர­சுரம்
தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை என்று குறிப்­பிட்டு தம்­புள்ளை நகரில் துண்டுப் பிர­சு­ர­மொன்றும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

வியா­பாரம் செய்­வ­தென்றால் வியா­பாரம் செய்­யுங்கள். இல்­லை­யென்றால் பள்ளி. இவ்­வா­றில்­லா­விடில் உங்­க­ளுக்கு ஒன்­று­மில்­லாமல் போகும் எனக் குறிப்­பிடப்பட்டுள்­ளது.

நேற்­றைய ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின் போது பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள் இவ்­வி­வகா­ரங்­க­ளையும் எடுத்து விளக்கி உல­மா­ச­பையின் அறி­வு­ரை­களைக் கோரி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தம்­புள்ள ராஹுல தேரர் பள்­ளி­வா­ச­லுக்கு 20 பேர்ச் காணி வழங்­கு­வதை ஆத­ரித்­துள்ள அதே­வேளை ரங்­கிரி  ரஜ­ம­கா­வி­கா­ரையைக் சேர்ந்த தேரர்­களே காணி வழங்­கு­கின்­ற­மையை எதிர்க்­கின்­றனர்.

இதேவேளை, தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  (vidi.v)
Previous Post Next Post