Headlines
Loading...
மறைந்த தலைவர்  அஸ்ரப் கண்டி தலைமையை விரும்பவில்லை

மறைந்த தலைவர் அஸ்ரப் கண்டி தலைமையை விரும்பவில்லை



ஜெமீல் அகமட்

 தனக்கு பிறகு கிழக்கு மாகானத்தின் அம்பாறை மாவட்டத்தில் பிறந்த மகன்  அல்லது வட மாகாணத்தில் பிறந்த மகன் இருவரின்  ஒருவரே கட்சியின் தலைவராக வர வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் எடுத்த முடிவு இதை இன்று சிலர் மறைத்து அஸ்ரப் அவர்களுக்கு துரோகம் செய்து கொண்டு சுகபோகம் அனுபவிக்கின்றனர் 

வடக்கில் தூன்பம் அறிந்த மக்களும் கிழக்கில் சமுதாயம் அறிந்த மக்களும் இருப்பதால் இந்த இருமாகானத்தை சேர்ந்த மக்களால் மட்டுமே  சமுதாயத்தை பாதுகாக்க முடியும் வேறு எந்த மாகான தலைமையும் சமுதாயத்தையோ இந்த சமுதாய கட்சியையோ பாதுகாக்க முடியாது என்று அஸ்ரப் கூறியுள்ளார்

எனவே முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகளே நமது  தலைவன் நாவினால் பொழிந்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது  

அழிந்து போய் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்றால் மறைந்த தலைவர் கூறியபடி  அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சிறிய தந்தை சமுக சிந்தனைவாதி கட்சியின் பாதுகாவல் என்று பலராலும் போற்றப்படும் கட்சியின் செயலாளர் ஹசன் அலி அவர்களை தலைமைக்கு நாம் தெரிவு செய்ய வேண்டும் அல்லது அம்பாறை மாவட்டத்தில் இன்று இருக்கும் மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு சமுக சிந்தனை கொண்ட      முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை விரும்பும்  ஒருவரே  கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக இருக்க வேண்டும் ஏனையோர் கட்சிக்கு துரோகம் செய்தவர்களாகவே கானப்படுகின்றனர்  ஆகவே அஸ்ரப் அவர்கள் ஹசன் அலியை தலைவராக நியமிக்க அம்பாறை மாவட்டத்தை தெரிவு செய்து இருக்கலாம் 

ஆனால் இன்று பதவி பணத்துக்கு ஆசைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸில் வந்து குடியேறி ஒட்டியிருக்கும் சிலருக்கு கட்சியின் வளர்ச்சிக்காக ஹசன் அலி அவர்கள்  மேற்கொள்ளும்  அரசியல் நகர்வுள் பிடிக்காத சூழ் நிலை இன்று கானப்படுகின்றது இதனால் இன்று ஹசன் அலியை ஹக்கிம்  கட்சிலிருந்து விரட்டும் சதி திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது இதனால் ஹக்கிமுக்கு வாலாட்டுபவர்கள்  ஹசன் அலியை கட்சியிலிருந்து தூரப்படுத்த ஹக்கிமுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் 

 ஆனால் சமுதாயத்துக்காக கட்சி வேண்டும் என்ற சிறந்த சிந்தனையோடு கட்சியை உருவாக்க தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி  உறுதூனையக இருந்து கட்சிக்காக தனது சொத்துக்களை தியாகம் செய்தவர் என்றால் ஹசன் அலி என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது இன்று அஸ்ரப் அவர்களின் பெயரை வைத்து மக்களை  எமாற்றி சுகபோகம் வாழ்பவர்கள்  ஒரு ரூபாய் தனது சொந்த பணத்தை செலவு செய்து இருப்பார்கள் என்பது ??? இப்படியானவர்கள் இன்று வீரவசனம் பேசி கட்சியை தனது பாட்டனார் சொத்து போல் வழி நடத்த நினைக்கின்றனர் அதற்கு இனி வழி விடாது தனைவர் அஸ்ரப் அவகளின் நோக்கத்தின்படி அம்பாறையில் மாவட்டத்தில் தலைமை வர  முயற்சி செய்ய  வேண்டும் 
 பதவி பணத்துக்கு ஆசை கொண்ட அரசியல்வாதிகளே அதிகம்  அம்பாறையில் இருப்பதால் தலைமை என்ற போட்டி உருவாகலாம் அப்படி ஒரு நிலை வரும் போது தலைவர் அஸ்ரப் கூறியபடி வட மாகாண மகன் என்ற ரீதியில் 

 இன்று வடக்கில் சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் ஒரு அரசியல்வாதி என்றால் அமைச்சர்  றிசாத் அவர்கள் என்பது இன்று நாட்டு மக்களுக்கு தெரியும் அவரின் துனிவும் துனிச்சலும் இன்று  மக்களால் போற்றி புகழப்படுகின்றது இதனால் அவரின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகவும் வளர்ச்சி அடைந்து மக்களின் பெராதரவு பெற்று வருகிறது அதனால் முஸ்லிம்களின் தேசிய தலைவர் றிசாத் பதியூதின் என்ற கருத்து இன்று  மக்களிடையே நிலவுகின்றது இன்று முஸ்லிம் சமுகம் மக்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி அமைச்சர் றிசாத்தின் கரங்களை பலப்படுத்த முடிவு செய்து கொண்டு இருக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அழிவு பாதையில் செல்வதை உண்மையான போராளி விரும்பமாட்டான் 

எனவே மறைந்த தலைவர் உருவாகிய கட்சியை வளர்ச்சி அடைய செய்ய வடமாகான அரசியல் சிங்கம் என்றால் அது அமைச்சர்  றிசாட் என்னும் வீரமகனால் மட்டுமே முடியும் அதனால் அமைச்சர் றிசாட் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் எடுத்து தலைமை பதவியை வழங்கினால் மிகவும் பொறுத்தமாக இருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் சானக்கிய தலைவரால் திட்டமிட்டு கட்சியிலிருந்து விரட்டப்பட்ட அனைவரும் றிசாட் தலைமையின் முஸ்லிம் காங்கிரஸில் இனையும் பொண்னான காலம் உருவாகும் 

எனவே மண்னறையில் உறங்கும் மாமனிதன் நிம்மதியாக உறங்க அவரின் இலட்சியத்தை நிறைவேற்ற அம்பாறை மாவட்டத்தில் அல்லது வடக்கில் தலைம உருவாக பேராளர் மகாநாட்டில்  போராளிகள்  போராட வேண்டும்

கிழக்கு மக்கள் உருவாக்கிய கட்சியின் பேராளர் மகாநாட்டை கிழக்கில் நடத்த விரும்பாத ஹக்கிமை கிழக்கில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதிகள் தலைவர் என்று ஏற்றுக் கொண்டு இருப்பது அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் துரோகம் எறு தான் கூற வேண்டும் அத்தோடு கிழக்கு மக்களின் வாக்குகளால் சொகபோகம் வாழும் ஹக்கிம் கிழக்கில் ஏன் பேராளர் மகாநாட்டை நடத்த விரும்பவில்லை என்றால் கிழக்கில் பேராளர் மகாநாடு தனது பதவியை தூக்கி ஏறியும் என்ற பயத்தில் தான் கிழக்கில் நடத்தாமல் வேறு இடத்தில் மகாநாட்டை நடத்துகிறார் என்பது வெளிப்படையாக புரிகிறது இதை தட்டிக்கேட்க முடியாத உயர்பிட உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருப்பது வேடிக்கையாகும் 

நடைபெறும் பேராளர் மகாநாட்டில் தனது  கள்ள வேலைகளை தட்டிக்கேட்பவர்களுக்கு ஆப்பு வைத்து தனக்கு தலையாட்டும் பொம்மைகளுக்கு கட்சியின் உயர்பதவிகளை அதவது செயலாளர்  தவிசாளர் பதவியை கொடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவவதே ஹக்கிமீன் திட்டமாகும் இதற்கு உயர்பிட உறுப்பினர்கள் தலைசாய்க்க கூடாது இன்று சமுதாயத்தில் பிளவை உருவாக்கி கட்சியை அழித்து கொண்டு இருக்கும் கரையான் ஹக்கிமை தலைமை பதவியிலிருந்து விரட்ட சகலரும் முன் வர வேண்டும் 

ஹக்கிம் தலைமை பதவி ஏற்று 17 வருடமாகின்றதுஇந்த காலத்தில்  இது வரை பதவி ஆசை என்று பெயர் சூட்டி பலரை திட்டமிட்டு கட்சியை விட்டு தூரத்தியுள்ளார் ஆனால் ஹக்கிம் 17 வருடமாக குற்றம் செய்ய வில்லையா ? என்று உயர்பிட உறுப்பினர் சிந்திக்க வேண்டும்  ஹக்கிம் குற்றம் செய்யாத பாலகன் போல் வேஷம் போட்டு பணத்தால் தனது தலைமை பதவியை இன்று வரை  பதுகாத்து வருகிறார் இதற்கு இன்னும் உயர்பிட உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மறூமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைவரும் 

இன்றைய ஹக்கிமீன் அரசியல் நடவடிக்கை என்பது சமூதாயத்துக்காவோ கட்சிக்காகவோ அல்ல அவரது சொகுசு வாழ்க்கைக்காக தலைமை பதவியை பாதுகாக்க வேண்டும் இதுவே ஹக்கிம் இன்று செய்யும் அரசியல் இந்த அரசியல் செய்யும் ஹக்கிம் வேறு கட்சிக்கு தலைவராக இருக்கலாம் ஆனால் சமுதாய கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்க எந்த வித தகுதியும் ஹக்கிமிடம் இல்லை என்பது பாமர மக்கள்  இப்போது புரிந்து கொண்டு இருக்கின்றனர் அவர்கள் எதிர்வரும் தேர்தலில் ஹக்கிமை விரட்ட மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர் 
 ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பிட உறுப்பினர்களுக்கு புரியவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை 

எனவே நடைபெறும் பேராளர் மகாநாட்டில் தவிசாளர் செயலாளர் பதவியில் மாற்றாம் ஏற்படும் போது தலைமை பதவியிலும் மாற்றம் கட்டாயம் வர வேண்டும் மௌத்து வரை தலைவராக இருந்து தனது ஊழலை மறைக்க முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கிம் அவர்களின் பாட்டனார் சொத்து அல்ல அது அம்பாறை மாவட்ட மக்களின் கண்னீரால் உருவாக்கப்பட்ட சமுதாய கட்சி என்பதை ஹக்கிமுக்கு உரத்த குரலில் தெளிபடுத்த உயர்பிட அதுவும் அம்பாறை மாவட்ட உயர்பிட உறுப்பினர்கள் முன் வர வேண்டும் 

ஆகவே தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஹக்கிமை விரட்ட வேண்டும் என்ற கருத்துக்களை அதிகமான மக்கள் விரும்புகின்றனர் அதனால் பேராளர் மகாநாட்டில் புதிய தலைவரை தெரிவு செய்து கட்சியை அஸ்ரப் அவர்களின் யாப்பு பிரகாரம் தூய்மைபடுத்தி வளர்ச்சியடைய உயர்பிட உறுப்பினர்கள் முன் வர வேண்டும் அதை செய்யாமல் கை உயர்த்த ஒரு இலட்சம் என்ற அரசியலை விரும்பினால் மறுமை நாளில் அல்லாஹ்விடம் தப்ப முடியாது எனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பிட உறுப்பினர்களே தனி மனிதனுக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் அது இவ்வுலக வாழ்வையும் மறு உலக வாழ்வையும் பாதுகாக்கும் என்பதை மறவாதிர்கள்