Top News

அமெரிக்கா : அன்பால் அணைந்த தீ



அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் டரம்ப் பத­வி­யேற்­றதை அறிவோம். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டும்­போதே அவர் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களைத் தெரி­விப்­ப­வ­ரா­கவும் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும் வெ ளிப்­ப­டை­யா­கவே வெறுத்து விமர்­சிப்­ப­வ­ரா­கவும் அறி­யப்­பட்டார்.

இந் நிலை­யில்தான் அவர் ஜனா­தி­ப­தி­யாக கடந்த ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி பத­வி­யேற்­றதைத் தொடர்ந்து பல்­வேறு அதிர்ச்­சி­க­ர­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கிறார்.

இதற்­க­மைய அவர் ஏழு முஸ்லிம் நாடு­களின் பிர­ஜைகள் அமெ­ரிக்­கா­வினுள் நுழை­வ­தற்கு அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு தடை விதித்­துள்ளார். ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமா­லியா, சூடான், யெமன் ஆகிய நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கே இவ்­வாறு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

ட்ரம்பின் இந்தத் தடை முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி முஸ்­லி­மல்­லாத அமெ­ரிக்­கர்­களைக் கூட கடு­மை­யாகப் பாதித்­துள்­ளது. இதன் கார­ண­மாக அங்கு தொட­ராக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடந்து வரு­கின்­றன. ட்ரம்பின் இந்த உத்­த­ரவை ஏற்க மறுத்த அந்­நாட்டு தலைமை வழக்­க­றி­ஞரும் தற்­போது பதவி நீக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு அமெ­ரிக்­காவின் புதிய அர­சியல் சூழல் கொந்­த­ளிப்­பாக இருக்­கின்ற நிலையில் கடந்த 28 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை அந்­நாட்டின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் அமைந்­துள்ள விக்­டோ­ரியா இஸ்­லா­மிய நிலையம் என்­ற­ழைக்­கப்­படும் பள்­ளி­வாசல் முற்­றாக தீக்­கி­ரை­யா­னது. 

இச் சம்­பவம் பற்றி முழு­மை­யான விசா­ரணை அறிக்கை இது­வரை வெளியி­டப்­ப­டா­விட்­டாலும் இது ஒரு நாச­காரச் செயல் என்றே நம்பப்படுகிறது. 

அதி­காலை 2 மணி­ய­ளவில் பள்­ளி­வா­சலில் தீ பர­விய நிலையில் சுமார் 4 மணி நேர போராட்­டத்தின் பின்­னரே தீ அணைக்­கப்­பட்­டது. எனினும் அதற்குள் பள்­ளி­வாசல் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யி­ருந்­தது.

 பள்­ளியில் தீ பிடித்தால் எச்­ச­ரிக்கும் அலா­ரமை யாரோ அணைத்து வைத்­து­விட்­ட­தா­கவும், கதவை திறந்து வைத்­தி­ருந்­த­தா­கவும் பள்­ளி­வா­சலின் பேஷ் இமாம் ஹஸ்மி தெரி­வித்­துள்ளார். 

2000 ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட இந்த பள்­ளி­வா­சலில் கடந்த 21 ஆம் திகதி தான் கொள்ளைச் சம்­பவம் ஒன்றும் இடம்­பெற்­றி­ருந்­தது. இனந்­தெ­ரி­யாத நப­ரொ­ருவர் பள்­ளிக்குள் புகுந்து மடிக்­க­ணினி உள்­ளிட்ட இலத்­தி­ர­னியல் பொருட்­களை திருடிச் சென்­றி­ருந்தார்.
 மேலும் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு முஸ்­லிம்கள் மீதான வெறுப்பு கார­ண­மா­கவும் இந்த பள்­ளி­வாசல் குறி­வைக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

7 முஸ்லிம் நாடு­களைச் சேர்ந்த மக்கள் அமெ­ரிக்­கா­வுக்கு வர தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்­த­ரவு பிறப்­பித்த சில மணி­நே­ரத்தில் இந்த சம்­பவம் நடந்­ததன் கார­ண­மாக இந்த விடயம் அமெ­ரிக்­கர்கள் மத்­தியில் பெரும் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றது. இதன் கார­ண­மாக அந்­நாட்டு மக்கள் உட­ன­டி­யா­கவே இச் சம்­ப­வத்தைக் கண்­டித்­தனர். தமது ஆத­ரவை முஸ்­லிம்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தினர்.

இந் நிலை­யில்தான் குறித்த பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பிர­தே­சத்தில் வசிக்கும் ஒமர் ராஷித் எனும் இளைஞர் பள்­ளி­வா­சலை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நிதி திரட்டும் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்தார். இதற்­க­மைய தீயினால் எரிந்த இப் பள்­ளி­வா­சலை மீளக் கட்­டி­யெ­ழுப்ப 8 இலட்­சத்து 50 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்கள் தேவைப்­ப­டு­வ­தாக அவர் அறி­வித்தார். ஆனால் அல்­லாஹ்வின் உத­வியால் இந்த அறி­விப்பு விடுக்­கப்­பட்ட 48 மணி நேரத்­தினுள் 9 இலட்சம் டொலர்கள் நிதி சேக­ரிக்­கப்­பட்­டது.

நேற்று மாலை இக் கட்­டுரை எழு­தப்­படும் வரை கடந்த நான்கு நாட்­களில் சேர்ந்த தொகை 10 இலட்­சத்து 67,510 டொலர்­க­ளாகும். இந்தக் கணம் வரைக்கும் மக்கள் பணத்தை அன்­ப­ளிப்புச் செய்து கொண்­டே­யி­ருக்­கி­றார்கள். 22,535 பேர் இது­வரை தமது பங்­க­ளிப்­பு­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள்.  இதில் குறிப்­பி­டத்­தக்க விடயம் என்­ன­வெனில் இந்த அன்­ப­ளிப்­பு­களை வழங்­கி­ய­வர்­களில் மிகப் பெரும்­பா­லா­ன­வர்கள் முஸ்­லி­மல்­லா­த­வர்­க­ளே­யாவர். 

அதிலும் பள்­ளி­வா­சலைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தம்மால் முடி­யு­மான பண உத­வி­களை மாத்­தி­ர­மன்றி உட­லு­ழைப்­புக்­களை வழங்­கவும் கட்­டிடப் பணியில் நேர­டி­யாகப் பங்­கேற்­கவும் விரும்­பு­வ­தாக பலரும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

Go Fund Me எனும் இணை­ய­தளம் மூலமே இந்த நிதி திரட்டல் இடம்­பெ­று­கி­றது. குறித்த நிதி திரட்டல் இணை­யத்தில் முஸ்­லி­மல்­லாத அமெ­ரிக்­கர்கள் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்கள் கண்­ணீரை வர­வ­ழைக்­கின்­றன. அமெ­ரிக்க மக்கள் எவ்­வ­ளவு சகிப்­புத்­தன்மை கொண்­ட­வர்கள், மனி­தா­பி­மா­ன­மிக்­க­வர்கள், முஸ்­லிம்­களை அவர்கள் எவ்­வ­ளவு தூரம் நேசிக்­கி­றார்கள் என்­பதை இந்தக் கருத்­துக்கள் தெளிவாக எடுத்துக் கூறு­கின்­றன. ஆயிரக் கணக்­கான மக்கள் இவ்­வாறு தமது கருத்­துக்­க­ளையும் கவ­லை­க­ளையும் பகிர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவற்றில் மிகச் சில­வற்றை மாத்­திரம் இங்கு தமிழில் தரு­கிறோம்.

மார்டின் வங்னர் : நான் ஒரு நாஸ்­திகன். உங்­க­ளுக்கு நடந்­த­வைகள் பற்றி நான் ஆழ்ந்த கவ­லைக்­குள்­ளா­கி­யுள்ளேன். வெறுப்­ப­டைந்­துள்ளேன். மதச் சுதந்­திரம் அடிப்­படை உரி­மை­யாகும்.

பெக்கி கர்டிஸ் : என்னால் அதி­க­மான பணம் அன்­ப­ளிப்புச் செய்ய முடி­யாது. ஆனால் என்னால் இந்த பள்­ளி­வா­சலை கட்­டி­யெ­ழுப்ப எனது கரங்­க­ளையும் நேரத்­தையும் தந்து உதவ முடியும். எமது உத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஏதும் திட்­டங்கள் உள்­ளதா? 

மேரி ஒஸ்போர்ன் : எங்­க­ளுக்கு சம்­பளம் கிடைத்­ததன் பின்பு 3 ஆம் திகதி நான் நன்­கொடை வழங்­குவேன். நாங்கள் நாஸ்­தி­கர்கள். ஆனால் இவ்­வா­றான அறி­வற்ற வெறுப்­பூட்­டு­கிற நட­வ­டிக்­கைக்­காக  நாங்கள் மிகவும் மன­மு­டைந்­துள்ளோம். நாங்கள் உங்­க­ளுடன் அனைத்­திலும் ஒன்­று­பட்டு நிற்போம். அனைத்து அமெ­ரிக்­கர்­களும் தாரா­ள­மாக சமா­தா­னத்­துடன் வணக்­கங்­களில் ஈடு­பட வேண்டும். பாது­காப்­பு­டனும் வணக்­கங்­களில் ஈடு­பட வேண்டும். அவர்கள் எவ­ரென்­றாலும் பர­வா­யில்லை.

மார்கோ மைக்கல் : உள்ளூர் களஞ்­சி­ய­சா­லை­க­ளுக்கு சென்று அவர்­க­ளுக்கு அன்­ப­ளிப்பு செய்­வ­தற்கு இருப்­பதை பற்றி விசா­ரிக்க வேண்டும் என்று கருத்து தெரி­விக்­கிறேன். நான் ஒரு பண்­ட­க­சா­லையின் முன்னாள் மெனேஜர். என்னை நம்­புங்கள். அவர்கள் வரு­டாந்தம் மில்­லியன் கணக்கில் அன்­ப­ளிப்பு செய்­வார்கள்.

கரேன் உம்லேன்ட் : இப்­பொ­ழுது என்­னிடம் அதி­க­மாக பணம் இல்லை என்­றாலும் நான் இவ்­வாரம் ஊர் திரும்­ப­வுள்ளேன். எனது தச்சுத் திற­மையை பயன்­ப­டுத்தி பள்­ளியை மீளக் கட்­ட­மைக்கும் முயற்­சி­க­ளுக்கு உத­வி­களை வழங்க முடியும். உங்கள் சமூகம் தீவி­ர­வா­தி­களால் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்­பாக மிகவும் கவ­லைப்­ப­டு­கிறேன்.

இந்­நாடு இப்­போ­தி­ருப்­பதை விட சிறந்­த­தாக இருக்க வேண்டும். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் எதிர் பார்க்­கிறேன். நாங்கள் அனை­வரும் அமெ­ரிக்­காவில் ஒவ்­வொரு நக­ரங்­க­ளிலும், ஒவ்­வொரு பட்­ட­ணங்­க­ளிலும் பாது­காப்­பாக வணக்­கங்­களில் ஈடு­ப­ட­வேண்டும்.

அந்த நாள் விரைவில் வரும் எனவும் நான் எதிர்­பார்க்­கிறேன். பெரும்­பா­லான அமெ­ரிக்­கர்கள் இந்த கல­வ­ரங்கள், தாக்­கு­தல்கள் மற்றும் மத வெறிச்­செ­யல்­க­ளுக்கு முற்றும் எதி­ரா­ன­வர்கள். இவை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தவை என்­பதை தய­வு­செய்து அறிந்­து­கொள்­ளுங்கள். உங்கள் மீது சாந்தி ஏற்­ப­டட்டும்.

பெய்த் முர்ரி : உங்­க­ளுக்கு அன்­ப­ளிப்­பாக வழங்க என்­னிடம் பணம் இல்லை. ஆனால் நான் சில வார்த்­தைகள் தெரி­விக்க வேண்டும். இது­போன்ற சம்­பவம் இந்த மாத ஆரம்­பத்தில் எனது சமூ­கத்தில் இடம்­பெற்­றது.

ஆனால் எனது சமூகம் அதனை அன்­புடன் எதிர்­கொண்­டது. உங்­க­ளது பள்­ளி­வாசல் ஒன்று இழப்­புக்­குள்­ளா­னமை குறித்து நான் மிகவும் கவ­லை­ய­டை­கிறேன். உள்ளூர் சமூகம் உத­விகள் செய்ய முன்­வந்­ததும் இல்லை. உங்கள் இணைய சமூகம் என்றும் உங்கள் மீது அன்பு கொண்­டி­ருக்கும்.

டான் லவிங்குட் : விக்­டோ­ரியா இஸ்­லா­மிய நிலை­யத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நிதி அன்­ப­ளிப்பு செய்­வதில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். விக்­டோ­ரி­யாவில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக செயற்­பட்ட குற்­ற­வா­ளி­களை டெக்ஸாஸ் கண்டு பிடித்து அவர்­க­ளுக்குத் தண்­டனை வழங்க வேண்டும்.

டயன் வெடிங்டன் : இந்தச் செயலை நான் கண்­டிக்­கிறேன். இது மீண்டும் இடம்­பெ­றக்­கூ­டாது. அமை­தி­யான சமா­தா­ன­மான வணக்­கங்­க­ளுக்­காக நாம் உங்­க­ளுடன் இருப்போம். எனது காசோலை விரைவில் உங்­க­ளுக்குக் கிடைக்கும்.

அனி சியா­ரால்டி : உங்­க­ளது பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட சம்­பவம் குறித்து நானும் எனது குடும்­பமும் மன்­னிப்புக் கோரு­கிறோம்.பள்­ளி­வாசல் சிலரால் தீயி­டப்­பட்­ட­மை­வ­ருந்­தத்­தக்க துய­ர­மான செய­லாகும். நாங்கள் எங்­க­ளது பிரார்த்­த­னை­களை உங்­க­ளுக்குச் சமர்ப்­பிக்­கின்றோம்.

மெலிஸ்ஸா கென்ட்ரிக் : எனது வர்த்­தக நிலை­யங்­களின் (எனக்கு Fair Trade Store என்று ஒரு சிறிய வர்த்­தக நிலையம் சொந்­த­மா­க­வுள்­ளது) செவ்­வாய்க்­கி­ழமை விற்­ப­னையின் நூறு வீதத்­தையும் மீள் நிர்­மாண நிதி­யு­த­வி­யாக அனுப்பி வைக்­கிறேன். நாங்கள் என்றும் உங்­க­ளுடன்.

எர்னி கெபோ பியன்கோ : உங்­க­ளது மீள் நிர்­மாணம் மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. இந்தச் சிறிய உல­கத்தில் நாம­னை­வரும் ஒன்றே. கடவுள் கடவுள் தான். நாங்கள் அனை­வரும் ஒன்றே. இந்த நல்ல பணிக்கு யாரெல்லாம் உத­வு­கி­றார்­களோ அவர்கள் இத­யத்தில் கருணை நிறைந்­த­வர்கள்.

நன்­றிகள். கடவுள் இதனை நிறை­வேற்றி வைப்பார் என்று நான் நம்­பு­கிறேன். பல­மான முஸ்லிம் சகோ­தர, சகோ­த­ரி­களே உங்­களை அமெ­ரிக்கா வர­வேற்­கி­றது.

கெலி ஆன் கிரீனி : உங்­க­ளது அழ­கான பள்­ளி­வா­சலை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக எனது அன்­ப­ளிப்­பு­க­ளையும் நேரத்­தையும் செல­வி­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறேன். உங்­க­ளுக்கு ஏதும் உத­விகள் தேவையா? என்­பதை தயவு செய்து அறி­வி­யுங்கள் நான் சென். அந்­டோ­னி­யோவில் வாழ்­கிறேன். நான் அங்கு வரு­வதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

ரிக் ஸ்லின் : அஸ்­ஸ­லாமு அலைக்கும் நான் மிகவும் கவ­லை­ய­டை­கிறேன். எனது நாட்டில் ஏற்­பட்ட கல­வரம் பற்றி துய­ர­மு­று­கிறேன். விரும்­பத்­த­காத ஒருவர் நாட்டின் பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். நான் 200 டொலர்கள் அன்­ப­ளிப்பு செய்­கிறேன்.

ஏ.ஜே. உர்பன் : அஸ்­ஸ­லாமு அலைக்கும். நான் கட்­டி­டங்­களை இடித்துத் தள்­ளு­வதில் (Demolition) ஒரு நிபுணர். அத்­தோடு தச்சுத் தொழில் செய்­பவர். நான் மிகவும் ஏழை, இந்தச் சந்­தர்ப்­பத்தில் எனது வாட­கையைக் கூட செலுத்த முடி­யா­தி­ருக்­கிறேன். என்­றாலும் எனது நேரத்­தையும் எனது திற­மை­யையும் அன்­ப­ளிப்புச் செய்­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறேன். எனது தொடர்பு இலக்கம் இது 832 9463653.

தோமஸ் ஜவர்சன் : நான் எனது மகளைச் சந்­திப்­ப­தற்­காக ஏப்ரல் மாத இறு­தியில் பாலி­யி­லி­ருந்து டெக்­ஸா­ஸுக்கும் பய­ண­மா­க­வுள்ளேன். நானும் எனது மனை­வியும் அங்கு தங்கி பள்­ளி­வா­சலை மீள நிர்­மா­ணிப்­ப­தற்கு உத­விகள் செய்ய விரும்­பு­கிறோம் முடி­யுமா? நான் ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர்.

ஆனால் ஒரு தச்­சா­ள­ராக என்னைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். யாரா­வது பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து எனக்கு மின்­னஞ்சல் அனுப்பி வைக்க முடி­யுமா?

ரொபர்ட் ஹப்பார்ட் : சம்­ப­வத்தைக் கேள்­வி­யுற்றேன். மன்­னிப்புக் கோரு­கிறேன். எனது அடுத்த மாத சம்­ப­ளத்­த­லி­ருந்து நான் அன்­ப­ளிப்பு வழங்­கு­கிறேன்.

எங்கள் பள்­ளி­வா­சல்கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்­காக சுற்­றி­வர பாது­காப்பு மதில்கள் அமைக்­கப்­பட வேண்டும். மேலும் பள்­ளி­வா­சல்­க­ளிலும் பள்­ளி­வாசல் சொத்­து­க­ளிலும் கம­ராக்கள் பொருத்­தப்­பட வேண்டும். நாங்கள் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­புவோம். உங்­க­ளுக்கு என்றும் உத­வி­யாக இருப்போம்.

கரன் பும்லன்ட் : என்­னிடம் தற்­போது அதி­க­மாக பணம் இல்லை. ஆனால் நான் இவ்­வாரம் டெக்­ஸா­சுக்கு திரும்பி வருவேன். எனது தச்சுத் தொழில் திற­மையை பள்­ளி­வா­சலை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக உதவி செய்ய முடியும். தீவி­ர­வா­தி­களால் உங்­க­ளது சமூகம் குறி வைக்­கப்­பட்­டமை ரு­கிறேன்.

எனது அடுத்த மாத சம்­ப­ளத்­த­லி­ருந்து நான் அன்­ப­ளிப்பு வழங்­கு­கிறேன். எங்கள் பள்­ளி­வா­சல்கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்­காக சுற்­றி­வர பாது­காப்பு மதில்கள் அமைக்­கப்­பட வேண்டும். மேலும் பள்­ளி­வா­சல்­க­ளிலும் பள்­ளி­வாசல் சொத்­து­க­ளிலும் கம­ராக்கள் பொருத்­தப்­பட வேண்டும். நாங்கள் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­புவோம். உங்­க­ளுக்கு என்றும் உத­வி­யாக இருப்போம்.

கரன் பும்லன்ட் : என்­னிடம் தற்­போது அதி­க­மாக பணம் இல்லை. ஆனால் நான் இவ்­வாரம் டெக்ஸாசுக்கு திரும்பி வருவேன். எனது தச்சுத் தொழில் திறமையை பள்ளிவாசலை மீளக் கட்டியெழுப்புவதற்காக உதவி செய்ய முடியும். தீவிரவாதிகளால் உங்களது சமூகம் குறி வைக்கப்பட்டமை குறித்து வருந்துகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்த நாடு இன்றை விடவும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அந்த நிலைமை ஒரு நாள் உருவாகும். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக எமது வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியும்.

அமெரிக்காவின் நகரங்களிலும் பட்டணங்களிலும் இந்நிலை உருவாகும் நாள் வரும். பெரும்பாலான அமெரிக்கர்கள் இவ்வகையான வெறிச் செயல்களையும் கலவரங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இவற்றை முழுமையாக எதிர்க்கிறார்கள். உங்கள் மீது சாந்தி ஏற்படுவதாக. (விடிவெள்ளி)
Previous Post Next Post