ஷேக் மிஷாரி
சக்தியின் நியூஸ் பெஸ்ட் செய்தியறிக்கையில் கடந்த ஒரு சில தினங்களாக தாறுஸ்ஸலாம் குறித்த தொகுப்பு வெளியாகிக் கொண்டு வருகிறது, இதில் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூதின் முகப்புத்தக பதிவுகள் காட்சிப்படுத்தப்படுகிறது.
அரசியல் மட்டத்தில் கெபிடல் மஹாராஜா நிறுவனத்திற்கும் பசீர் சேகுதாவூதுக்கும் இருக்கும் நெருக்கம் தெரியும், இதனை திட்டமிட்டு ஜே. சிறீ ரங்காவும் பசீரும் செய்வதும் தெரியும். இதில் ஒன்று என்னவென்றால் இதற்காக செக்மண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பிரச்சினைகள் குறிப்பாக வில்பத்து, வட்டமடு, கூரகல, தம்புள்ள முஸ்லிம் காணி பிரச்சினைகள், இன்னோரன்ன முஸ்லிம் பிரச்சினைகளை தினம் தினம் இவர்கள் ஒளிபரப்புவார்களா? அல்லது தமிழர்களின் காணாமல் போனவர் ஆர்பாட்டத்ததை நேரலை செய்வார்களா? இல்லை அவர்கள் விரும்பினால் எதையாவது பூதாகரைப்படுத்துவது இல்லை மறைப்பது இதுவே அவர்கள் செய்யும் வேலை.
இது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம், காரணம் முஸ்லிம் மானம், குறைகள் மறைக்கப்படவேண்டும் இதற்கு முஸ்லிம் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.