Headlines
Loading...
ஆக்கிரமிக்கப்படும் முஸ்லிம் பூர்வீகம்

ஆக்கிரமிக்கப்படும் முஸ்லிம் பூர்வீகம்



சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் மிகவும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலொன்று அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படுகிறதா எனும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி மத்திய மலை நாட்டிலும் இன்று இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் தக்­கியா ஒன்­றுக்கு அரு­கி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணிக்­க­ருகில் ஒதுக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் கடந்த  சனிக்­கி­ழமை  இர­வோ­டி­ர­வாக பெரும்­பான்மை இனத்­த­வர்கள் புத்தர் சிலை­யொன்­றினைக் கொண்டு  வைத்­துள்­ளனர்.

முஸ்­லிம்­களே நூறு வீதம் வாழும் இப்­ப­கு­தியில், முஸ்­லிம்கள் அரு­கி­லுள்ள பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்ந்­து­வரும் சூழ்­நி­லையில் இவ்­வாறு சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை முஸ்­லிம்கள் மத்­தியில் பலத்த அச்­சத்தை தோற்று­வித்­துள்­ளது.

 கிழக்கு மாகா­ணத்தில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான சிலை வைப்புச் சம்­ப­வங்கள் பர­வ­லாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மத்­திய மாகா­ணத்­திலும் முஸ்­லிம்­களின் காணிக்­க­ருகில் இவ்­வாறு சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை திட்­ட­மிட்ட ஆக்­கி­ர­மிப்புச் செயலா எனும் கேள்­வியை எழுப்­பு­கி­றது.

 இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு காணும் வகையில் பிர­தேச அர­சி­யல்­வா­தி­களும் பொலி­சாரும் முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் எது­வித தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை.  பொலி­சா­ரினால் இந்த விவ­காரம் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்ள நிலையில் இது தொடர்பில் பிர­தேச சபை மூல­மாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதிவான் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

 இது தொடர்பில் புத்­த­சா­சன மற்றும் நீதி­ அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்­ச­வுடன் கலந்­து­ரை­யாடி தீர்­வொன்றைக் காண­வுள்­ள­தாக முஸ்லிம் சமய விவா­கர அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

 எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அண்­மைக் ­கா­ல­மாக அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் திட்­ட­மிட்ட சிங்­கள ஆக்­கி­ர­மிப்­புத்­திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றதா எனும் கேள்வி பர­வ­லாக எழு­கி­றது.

இந்த சந்தேகத்தை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கடும்போக்கு தேரர்களை அழைத்து பௌத்த தொல்பொருள் வலயங்கள் தொடர்பில் கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையும் ஜனாதிபதி இவ்வாறானதொரு சந்திப்பை நடத்தியுள்ளார். 

 ஏற்­க­னவே அம்­பாறை மாவட்­டத்தில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் செறிந்து வாழும் இறக்­காமம் மலையில் சிலை வைக்­கப்­பட்டு இன்­னமும் அகற்­றப்­ப­ட­வில்லை. பிர­தேச சிங்­கள அமைச்சர் ஒரு­வரின் பின்­ன­ணி­யி­லேயே இச் சிலை வைக்­கப்­பட்­டது.

குறித்த அமைச்சர் ஜனாதிபதியின் தொல்பொருள் வலயங்கள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. 

அதேபோன்று அம்பாறை, பொத்­தானை கிரா­மத்­திலும் மட்­டக்­க­ளப்பின் செங்­க­லடி பகு­தி­யிலும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நிலத்தை பௌத்த தொல்­பொருள் வல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இவ்­வா­றான செயற்­பா­டுகள் முஸ்­லிம்­களை மிகுந்த அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ளன.  குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 43 இடங்கள் தொல்பொருள் உள்ள பூமிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

முஸ்லிம் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் இவ்­வா­றான திட்­ட­மிட்ட ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டு­க­ளுக்கு துணை போவது எந்த வகை­யிலும் ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தாகும். 

 எனவேதான் கெலிஓய உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இனங்களிடையே பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையிலான சிலை வைக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

இதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டிய முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் மௌனிகளாகவே இருக்கிறார்கள்.

 இவ்வாறான அரசியல் தலைமைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்களின் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' போல முஸ்லிம் இளைஞர்களும் வீதியிலிறங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் இப்போதைக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

(பைறுஸ் - பிரதம ஆசிரியர் விடிவெள்ளி)